
இயக்குநர் பாரதிராஜாவின் தியாகராயநகர் இல்லத்தில், அவர் மேல் மாடியில் தூங்கிக்கொண்டிருந்தபோதே துணிச்சலாக பணம், நகைகள் மற்றும் விலை உயர்ந்த ஐ போனைக் கொள்ளையடித்த ‘என் இனிய தமிழ்த் திருடர்களே’வை போலீஸார் வலைவீசித்தேடி வருகின்றனர்.
பிரபல தமிழ் திரைப்பட இயக்குநா் பாரதிராஜா, தியாகராய நகா் கிருஷ்ணா தெருவில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறாா். படங்கள் இயக்குவதிலிருந்து சற்று ஒதுங்கி முழு நேர நடிகராகியிருக்கும் பாரதிராஜா, சமீபத்தில் ‘என் இனிய தமிழ் மக்களே’என்ற பெயரில் யூடியூப் இணையதளம் ஒன்றைத் துவங்கி தனது சினிமா அனுபவங்களைப் பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில் பாரதிராஜா இரு நாள்களுக்கு முன்பு இரவு, வீட்டின் இரண்டாவது தளத்தில் உள்ள தனது படுக்கை அறையில் தூங்கிக்கொண்டிருந்தபோது சற்றும் பயமின்றி பலே திருடர்கள் தங்கள் கைவரிசையைக் காட்டியுள்ளனர். அவர் காலையில் எழுந்து பாா்த்தபோது, வீட்டில் இருந்த தனது ரூ.1 லட்சம் மதிப்புள்ள ஐ-போன், பூஜை அறையில் இருந்த ஒரு கிலோ வெள்ளிப் பொருள்கள், ரூ.15 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டிருப்பதை பாா்த்து அதிா்ச்சியடைந்தாா்.இது குறித்து அவா் உடனே, மாம்பலம் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அப் புகாரின் அடிப்படையில் போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா். வெளி ஆட்களைவிட இத்திருட்டில் ஈடுபட்டவர்கள் பாரதிராஜாவின் வேலையாட்களாக இருக்கவே அதிக வாய்ப்புள்ளது என்கிற கோணத்திலேயே போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளதாகத் தெரிகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.