தெறிக்கவிட்ட பாக்ஸ் ஆபிஸ் ஹிட்... ரிலீஸ் ஆகி 4 நாள் ஆனாலும் ஹவுஸ்புல்... மெர்சலான பிகில் வசூல்...அடுத்த ரஜினியாக மாறும் விஜய்...!

By Manikandan S R SFirst Published Oct 29, 2019, 12:17 PM IST
Highlights

 180 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ”பிகில்” திரைப்படம் ரிலீஸ் ஆன 4 நாட்களில் 152 கோடி ரூபாய் அளவிற்கு வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தெறிக்கவிட்ட பாக்ஸ் ஆபிஸ் ஹிட்... ரிலீஸ் ஆகி 4 நாள் ஆனாலும் ஹவுஸ்புல்... மெர்சலான பிகில் வசூல்...அடுத்த ரஜினியாக மாறும் விஜய்...!

விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படம் வசூலில் புதிய சாதனைகளை படைத்துள்ளது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, அட்லீ இயக்கத்தில் பிகில் திரைப்படம் அக்டோபர் 25ம் தேதி வெளியிடப்பட்டது. இதில் விஜய் உடன் நயன்தாரா, கதிர், யோகிபாபு, விவேக், ஜாக்கி ஷெராஃப், டேனியல் பாலாஜி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். ஆரம்பத்தில் நெகட்டீவ் கமெண்ட்ஸ்களைப் பெற்ற பிகில் திரைப்படம், அடுத்தடுத்த நாட்களில் சூடுபிடித்தது. திரையிட்ட தியேட்டர்கள் எல்லாம் ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடி வருகிறது. 

பிகில் படம் ரிலீஸ் ஆன 3 நாட்களில் உலக அளவில் ரூ.100 கோடி வரை அதிரடி வசூல் செய்தது. இந்நிலையில் 180 கோடி ரூபாய் பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ”பிகில்” திரைப்படம் ரிலீஸ் ஆன 4 நாட்களில் 152 கோடி ரூபாய் அளவிற்கு வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 150 கோடி ரூபாய் வசூல் கிளப்பில் உள்ள ’தெறி’, ’சர்கார்’, ’மெர்சல்’ படங்களின் வரிசையில் தற்போது  ”பிகில்” படமும் இணைந்துள்ளது. சென்னையின் பாக்ஸ் ஆபீஸ் கிங்காக மாறியுள்ள  ”பிகில்” திரைப்படம் இதுவரை 7 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வெளிநாடுகளிலும், இந்தியாவிலும் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ள  ”பிகில்” திரைப்படம், விஜய்யின் மற்ற படங்களின் வசூல் சாதனையை தவிடு பொடியாக்கி வருகிறது. பிரான்ஸ், நார்வே, அமெரிக்க உள்ளிட்ட வெளிநாடுகளில் மிகுந்த வரவேற்பு பெற்ற தமிழ்  திரைப்படம் என்ற பெருமை ”பிகில்” திரைப்படத்திற்கு கிடைத்துள்ளது. ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்துள்ள ”பிகில்”, ரூ.7.75 கோடி வசூல் செய்துள்ளது. கர்நாடகாவில் மட்டும்  ”பிகில்” திரைப்படம் 10 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன், ஹவுஸ்புல் காட்சிகள், ப்ளாக் பஸ்டர் ஹிட் என விஜய்யின் கேரியரில் மறக்க முடியாத படம் என்ற இடத்தை  ”பிகில்” பிடித்துள்ளது.
 

click me!