
உலகின் டாப் டென் படங்களில் எப்போதும் இடம்பெறும் ’ஃபாரஸ்ட் கம்ப்’படத்தின் இந்தி ரீ மேக்கில் அமீர்கானின் நண்பராக மிக முக்கியமான வேடத்தில் நடிக்க நம்ம விஜய் சேதுபதி ஒப்பந்தமாகியிருக்கிறார். அக்கதையில் அவர் தமிழக ராணுவ வீரராக நடிக்கவிருக்கிறார் என்று தெரிகிறது.
டாம் ஹாங்ஸ் நடிப்பில், ராபர்ட் ஜெமிக்கிஸ் இயக்கத்தில் 1994-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'ஃபாரஸ்ட் கம்ப்' (Forrest Gump). 1986ல்- வின்ஸ்டன் க்ரூம் எழுதிய நாவலின் அடிப்படையில் உருவான படம் இது. ஹாலிவுட்டில் வெளியான மிகச் சிறந்த திரைப்படங்களில் ஒன்று என பெயர் பெற்று, உலகளவில் எண்ணற்ற ரசிகர்களைக் கொண்ட திரைப்படம்.இன்றளவும் இந்தப் படத்தின் வசனங்களும், காட்சிகளும் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. சிறந்த நடிகர், சிறந்த இயக்குநர், சிறந்த தழுவல் திரைக்கதை, சிறந்த கிராபிக்ஸ், சிறந்த படத்தொகுப்பு உள்ளிட்ட பிரிவுகளில் ஆஸ்கர் விருதுகளையும் இப்படம் அள்ளியது. ‘93ல் ‘பிலடெல்ஃபியா’ படத்துக்காக சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் விருது வாங்கியிருந்த டாம் ஹாங்ஸ், அதற்கு அடுத்த ஆண்டும் தொடர்ச்சியாக ‘ஃபாரஸ்ட் கம்ப்’ படத்துக்கும் அதே விருதைத் தட்டிச்சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது இந்தப் படத்தின் இந்தி ரீமேக்கில் அமீர்கான் நடித்து வருகிறார். தற்போது ‘பாரஸ் கம்ப்’ இந்தி ரீமேக்கான ‘லால் சிங் சட்டா’ படத்தில் தான் அமீர் கானுடன் விஜய் சேதுபதி நடிக்க உள்ளது உறுதியாகியுள்ளது. ‘பாரஸ்ட் கம்ப்’ படத்தில்,பாபா என்ற கதாபாத்திரத்தில் மைகெல்டி வில்லியம்சன் என்ற நடிகர் நடித்திருந்தார். கம்ப் கதாபாத்திரம் ராணுவத்தில் இருக்கும் போது அவரது நண்பனாக இவர் தோன்றுவார். அவர் இறந்த பின், கம்ப் தனது வியாபாரத்தின் லாபத்தை பாபாவின் குடும்பத்துக்குக் கொண்டுபோய்ச் சேர்ப்பார். அந்த லாபத் தொகையைப் பார்த்து மொத்த குடும்பமும் மயங்கி விழும்.
இந்தி ரீமேக்கில் இந்த பாபா கதாபாத்திரம் தமிழராக சித்தரிக்கப்படவுள்ளதாகவும், இதில் தான் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மாதவன் - விஜய் சேதுபதி நடிப்பில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘விக்ரம் வேதா’ படத்தின் இந்தி ரீமேக்கில் அமீர்கான் நடிக்கவுள்ளார். இதில் விஜய் சேதுபதி நடித்த கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் அமீர்கான் நடிக்க உள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.