மதுமிதா மீது காவல்நிலையத்தில் புகார்..! விஜய் டிவி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை..!

By ezhil mozhi  |  First Published Aug 21, 2019, 12:46 PM IST

நிகழ்ச்சி தொடங்கி இரண்டாவது வாரத்திலேயே போட்டியாளர்கள் மதுமிதாவை நாமினேட் செய்து இருந்தனர்.


கமல் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ஜாங்கிரி மதுமிதா நிகழ்ச்சியில் இருந்து சென்ற வாரம் வெளியேற்றப்பட்டார்

நிகழ்ச்சி தொடங்கி இரண்டாவது வாரத்திலேயே போட்டியாளர்கள் மதுமிதாவை நாமினேட் செய்து இருந்தனர். இருந்தபோதிலும் மதுமிதாவின் மீது மக்கள் கொண்ட ஒருவிதமான அக்கறையினால்  அதிக ஓட்டு பெற்று அவர் காப்பாற்றப்பட்டார். இதேபோன்று அடுத்தடுத்து சில வாரங்களும் காப்பாற்றப்பட்டார்.

Tap to resize

Latest Videos

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது, தன்னை காயப்படுத்தி முயற்சி செய்வதாக அவர் மீது எழுந்த குற்றச்சாட்டை அடுத்து உடனடியாக பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார் மதுமிதா. இந்த நிலையில் நடிகை மதுமிதா மீது கிண்டி காவல் நிலையத்தில் புகார் அளித்து உள்ளது விஜய் டிவி நிர்வாகம்.

undefined

சம்பள பாக்கியை தரவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வதாக மதுமிதா மிரட்டி வருவதாகவும் அதன் காரணமாக அவர் மீது புகார் தெரிவித்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளது விஜய் டிவி நிர்வாகம். மேலும் பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது அவர் தன்னை காயப்படுத்திக் கொள்கிறார் என்பதற்காக பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே அனுப்பப்பட்டதாக விஜய் டிவி  நிர்வாகம் தெரிவித்து உள்ளது. இந்த சம்பவத்தால் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்த பேச்சு மக்கள்  மத்தியில் அடிபடுகிறது.   

click me!