தனுஷ் பட ரிலீஸ் அறிவிப்பு...ஏ.வி.எம்.பிள்ளையார் முன்னால சத்தியம் பண்ணுனாதான் நம்புவோம் பாஸ்...

Published : Aug 21, 2019, 12:14 PM IST
தனுஷ் பட ரிலீஸ் அறிவிப்பு...ஏ.வி.எம்.பிள்ளையார் முன்னால சத்தியம் பண்ணுனாதான் நம்புவோம் பாஸ்...

சுருக்கம்

இது எத்தனையாவது முறை என்று தெரியவில்லை. தனுஷின் ‘என்னை நோக்கிப் பாயும் தோட்டா’பட ரிலீஸ் தேதியை இன்று மாலை உறுதியாக, அதே சமயம் இறுதியாக வெளியிடுகிறேன். அதில் 100 சதவிகிதம் மாற்றம் இல்லை’என்று தயாரிப்பாளர் தரப்பு அறிவித்திருக்கிறது.  

இது எத்தனையாவது முறை என்று தெரியவில்லை. தனுஷின் ‘என்னை நோக்கிப் பாயும் தோட்டா’பட ரிலீஸ் தேதியை இன்று மாலை உறுதியாக, அதே சமயம் இறுதியாக வெளியிடுகிறேன். அதில் 100 சதவிகிதம் மாற்றம் இல்லை’என்று தயாரிப்பாளர் தரப்பு அறிவித்திருக்கிறது.

கெளதமன் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ் ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’. கடந்த 2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்படம் சில பல பிரச்சினைகளால் முடிய மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது. இதற்கிடையே, படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்தாலும், படம் ரிலீஸ் ஆவதில் இருந்த சிக்கல் நீடித்துக்கொண்டே வந்தது. சில மாதங்களுக்கு முன்பு சென்சார் ஆன நிலையில் பல முறை ரிலீஸ் தள்ளிப்போடப்பட்டதால் ஒரு கட்டத்தில் தனுஷ் இப்படத்தின் மீது இருந்த நம்பிக்கையை இழந்துவிட்டதாகவும் கூறப்பட்டது.தனுஷ் ரசிகர்கள் இப்படம் குறித்த எந்த அப்டேட்களையும் நம்புவதில்லை என்கிற அளவுக்கு விரக்தி அடைந்தனர்.

 இந்த நிலையில் இன்று வெளியாகிக்கொண்டிருக்கும் ஒரு செய்தியில் , ‘என்னை நோக்கி பாயும் தோட்டா’ படம் தொடர்பாக இருந்த அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்பட்டு விட்டதாகவும். இதனால், இந்த முறை இப்படக்குழு வைக்கும் ரிலீஸ் தேதி குறி தப்ப வாய்ப்பே இல்லை எனவும் படத்தை வரும் செப்டம்பர் 6 ஆம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. படம் தியேட்டர் வாசலுக்கு வர்ற வரைக்கும் இதை யாரும் நம்புறதா இல்லை பாஸ். வேணும்னா ஏ.வி.எம்.பிள்ளையார் கோவில்ல வந்து சத்தியம் பண்ணுங்க. அப்புறமா நம்புறதைப் பத்தி யோசிக்கலாம்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியை சந்தித்த பாலிவுட் ‘பாட்ஷா’ ஷாருக்கான் - வைரலாகும் வீடியோ
தனுஷை தொடர்ந்து விவாகரத்து சர்ச்சையில் சிக்கிய செல்வராகவன்..?