டாப் ஹீரோவுக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி..! கண்டிப்பா இதை எதிர்பார்த்திருக்க மாட்டீங்க..! வெளியான தகவல்..!

By manimegalai aFirst Published Aug 12, 2021, 3:36 PM IST
Highlights

தமிழ் சினிமாவில் டாப் ஹீரோவாக மட்டும் இல்லாமல், முரட்டு வில்லனாகவும் மாறி, மக்கள் செல்வன் என்று பெயர் எடுத்துவிட்ட விஜய் சேதுபதி, தற்போது பிரபல டாப் ஹீரோ ஒருவருக்கு வில்லனாக நடிக்க உள்ளது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
 

தமிழ் சினிமாவில் டாப் ஹீரோவாக மட்டும் இல்லாமல், முரட்டு வில்லனாகவும் மாறி, மக்கள் செல்வன் என்று பெயர் எடுத்துவிட்ட விஜய் சேதுபதி, தற்போது பிரபல டாப் ஹீரோ ஒருவருக்கு வில்லனாக நடிக்க உள்ளது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் சேதுபதி ஒரு தமிழ் பட நடிகராக இருந்தாலும், தன்னுடைய தனித்துவமான நடிப்பு திறமையால், அடுத்தடுத்து பல மொழி படங்களிலும் பிஸியாகி வருகிறார். அந்த வகையில், தற்போது மலையாளம், தெலுங்கு, ஹிந்தி  ஆகிய மொழிகளிலும் இவருடைய நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதே போல், தான் ஒரு முன்னணி ஹீரோவாக இருந்தாலும், நட்பு ரீதியாக சிறப்பு தோற்றத்தில் நடிக்க யார் அழைத்தாலும்...  சிரித்த முகத்தோடு நடித்து கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளார். 

மேலும் ஹீரோ, வில்லன், குணச்சித்திர வேடம் என எப்படி பட்ட கதாபாத்திரத்தை கொடுத்தாலும், அந்த கேரக்டரை ரசித்து நடிப்பதில் இவரை மிஞ்ச முடியாது. ஏற்கனவே தமிழில், ஹீரோ என்பதை தாண்டி, ரஜினி, விஜய், தற்போது கமல் என முன்னணி ஹீரோக்களுக்கு வில்லனாக நடித்து வரும் விஜய் சேதுபதி, தற்போது தெலுங்கில் டாப் ஹீரோ ஒருவருக்கு வில்லனாக நடிக்க உள்ளதாக புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது தெலுங்கு திரையுலகின் சிம்ம சொப்பனமாக இருக்கும் நடிகர் நந்தமுரி பாலகிருஷ்ணா நடிக்கும் படத்தில் தான் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க உள்ளாராம். இதுகுறித்த பேச்சுவார்த்தை தற்போது நடந்து வருவதாக கூறப்படுகிறது. ஆனால் இதுவரை இதுகுறித்த அதிகார பூர்வ தகவல் வெளியாகவில்லை. தெலுங்கில் விஜய் சேதுபதி நடித்த 'உப்பெண்ணா' படம் மிகப்பெரிய வெற்றிபெற்றதை தொடர்ந்து விஜய் சேதுபதி இந்த படத்தில் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!