பத்திரிகையாளர்களை தாக்க முயற்சி? திடீர் பிரச்சனை..! பாதியில் நிறுத்தப்பட்ட விஜய் சேதுபதியின் படப்பிடிப்பு!

By manimegalai aFirst Published Mar 21, 2021, 2:57 PM IST
Highlights

நடிகர் விஜய் சேதுபதியை தற்போது இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் நடித்து வரும், திரைப்படத்தில் திடீர் பிரச்சினை ஏற்பட்டதால் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

நடிகர் விஜய் சேதுபதியை தற்போது இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் நடித்து வரும், திரைப்படத்தில் திடீர் பிரச்சினை ஏற்பட்டதால் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் சேதுபதி ஒரு படத்தை நடித்து முடித்த கையோடு நான்கு படங்களில் கமிட்டாகி வருகிறார். இவருடைய வளர்ச்சி முன்னணி நடிகர்களையே பிரமிக்க வைக்கும் விதத்தில் உள்ளது அனைவரும் அறிந்ததுதான். இந்நிலையில், சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் 46வது படம் குறித்த அதிகாரப்பூர்வ வெளியானது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில், விஜய்சேதுபதி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இந்த படத்தை இயக்குனர் பொன்ராம் இயக்குகிறார்.

இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பில் திடீரென பிரச்சனை எழுந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா விதிமுறைகளை பின்பற்றாமல் மற்றும் தனிநபர் இடைவெளியை கடைபிடிக்காமல், பொதுமக்களுக்கு இடையூறு தரும் விதமாக திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் படப்பிடிப்பில் படக்குழுவினர் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த பிரபல ஆங்கில நாளிதழ் புகைப்படக்கலைஞர் அங்கு சென்றபோது படக்குழுவினருக்கும், புகைப்பட கலைஞருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது.

புகைப்பட கலைஞரை படக்குழுவினர் ஒருமையில் பேசியதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் சக பத்திரிகையாளர்கள் பலரும், படப்பிடிப்பை நிறுத்த கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சில மணி நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. நடிகர் விஜய் சேதுபதி நேரில் வந்து சமரசம் செய்ய முயன்றார். ஆனால் அதுவும் தோல்வியில் அடைந்துள்ளது.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படும் நபரை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். இதன் காரணமாக பாதியிலேயே படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. விதிமுறைகளை மீறியதற்காக 5000  ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் உரிய அனுமதியின்றி படப்பிடிப்பை நடத்தியதும் தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.

click me!