
தமிழ் சினிமாவில், 80 மற்றும் 90 களில், பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகராக அறியப்பட்ட நடிகர் கார்த்தி திடீர் மூச்சு திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
'மனித உரிமை காக்கும்' கட்சியின், நிறுவனரும், நடிகருமான கார்த்திக் நேற்று இரவு தீர் மூச்சுத்திணறலால் சென்னை அடையாறில் உள்ள மலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த தகவல் திரையுலகினர் மற்றும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜக மற்றும் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நடிகர் கார்த்திக் பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவித்தார். அதற்கான தேர்தல் பணிகளில் நேற்று இரவு ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது, உடனடியாக அவர் ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அடையாறில் உள்ள மலர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அவருக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் அவருக்கு கொரோனா பரிசோதனை செய்தபோது நெகட்டிவ் என வந்துள்ளதாக கூறப்படுகிறது. எனினும் தொடர்ந்து நடிகர் கார்த்திக்கிற்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த சம்பவம் திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரது ரசிகர்கள் பலர் விரைவில் நடிகர் கார்த்தி நலம் பெற வேண்டும் என பிராத்தனையில் ஈடுபட்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.