மீன் விற்பனை செய்து பிரச்சாரம் செய்து வாக்கு சேகரிக்கும் மன்சூர் அலிகான்!

By manimegalai aFirst Published Mar 21, 2021, 2:26 PM IST
Highlights

ஏற்கனவே இவர் லோக்சபா தேர்தலில் போட்டியிட்ட போது, வித்யாசமாக பிரச்சாரம் செய்து மக்களின் கவனத்தை ஈர்த்த இவர், தற்போது மீண்டும் தன்னுடைய வித்தியாசமான பிரச்சாரத்தை கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் கையில் எடுத்துள்ளார்.
 

நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த மன்சூர் அலிகான் வர உள்ள சட்டமன்ற தேர்தலில் அக்கட்சி தனக்கு சீட் கொடுக்காததால் அதிலிருந்து விலகினார். அதன் பின்னர் தமிழ் தேசிய புலிகள் கட்சி என்ற கட்சியை தொடங்கினார். ஆனால் கட்சியை பதிவு செய்ய கால அவகாசம் இல்லாததால் தேர்தலில் போட்டியிட முடியவில்லை என தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் சுயேட்சையாக போட்டியிட மன்சூர் அலிகான் மனு தாக்கல் செய்தார். 

மேலும் செய்திகள்: நடிகர் கார்த்திக்கு இந்த நிலையா? நடக்க கூட முடியாமல் சக்கர நாற்காலில் செல்லும் அதிர்ச்சி புகைப்படங்கள்!
 

“கோவை தெற்கு தொகுதியில் தான் முதலில் போட்டியிடலாம் என இருந்தேன். தமிழ் தேசிய புலிகள் கட்சியை ஆரம்பித்து மிக, மிக குறுகிய காலக்கட்டம். அதனால் தனியொருவனாக தேர்தலை சந்திக்க இருக்கிறேன். தொண்டாமுத்தூர் தொகுதி மக்களிடம் எனது வாக்குறுதிகள் என்ன என்பதை பத்திரத்தில் எழுதி கையெழுத்திட்டு கொடுப்பேன். இரண்டு வருடத்திற்குள் பிரச்சனைகளை சரி செய்ய முடியாவிட்டால் பதவியை ராஜினாமா செய்துவிடுவேன். உங்களில் ஒருவனாக சேவையாற்றுவேன். நான் மக்களிடம் வேலை கேட்டு வந்துள்ளேன். எனக்கு வாய்ப்பு கொடுத்தால் இந்த தொகுதியில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்ப்பேன் என மனு தாக்கல் செய்த போதே உரைத்த குரலில் கூறி இருந்தார்.

ஏற்கனவே இவர் லோக்சபா தேர்தலில் போட்டியிட்ட போது, வித்யாசமாக பிரச்சாரம் செய்து மக்களின் கவனத்தை ஈர்த்த இவர், தற்போது மீண்டும் தன்னுடைய வித்தியாசமான பிரச்சாரத்தை கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் கையில் எடுத்துள்ளார்.

மேலும் செய்திகள்:அச்சு அசல் தாத்தா விஜயகுமார் போலவே இருக்கும் பேரன்..! வைரலாகும் அருண் விஜய் சகோதரியின் மகன் புகைப்படம்..!
 

அந்த வகையில், இன்று காலை உக்கடம் மொத்த மீன் மார்க்கெட் பகுதியில் மன்சூரலிகான் பிரச்சாரம் மேற்கொண்டார்.
உக்கடம் மீன் மார்க்கெட்டில்  ஒரு கிலோ மீன் 100 ரூபாய் என வியாபாரம் செய்த அவர்,  மீன்களை துண்டு துண்டாக வெட்டிக்கொடுக்கும் பணியிலும் ஈடுபட்டார். பின்னர்  மீன் மார்க்கெட்க்கு வந்த  பொதுமக்களிடம்  நோட்டீஸ் வழங்கி பிரச்சாரம் மேற்கொண்ட மன்சூர் அலிகான்,  பொதுமக்களுடன் செல்பியும் எடுத்துக்கொண்டார்.

click me!