மோடி, ரஜினி, அனுஸ்கா ஷர்மாவை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த விஜய்... 2018-ல் இந்தியளவில் தளபதி தான் மாஸ்!

Published : Dec 05, 2018, 02:16 PM IST
மோடி, ரஜினி, அனுஸ்கா ஷர்மாவை பின்னுக்கு தள்ளி முதலிடம் பிடித்த விஜய்...  2018-ல் இந்தியளவில் தளபதி தான் மாஸ்!

சுருக்கம்

2018ம் ஆண்டு இந்தியளவில் ட்விட்டர் ட்ரெண்டிங்கில், மோடி, ரஜினிகாந்த் என இந்தியாவின் மிகப்பெரும் ஆளுமைகளை பின்னுக்குத்தள்ளி முதலிடத்தைப் பிடித்துள்ளார் தளபதி விஜய்.  

அரசியல் மற்றும் சினிமாத்துறையில் சமூக வலைத்தளங்களின் பங்கு அலப்பறியது. அரசியல் ரீதியான கருத்துக்களை நேரடியாக மக்களிடத்தில் சேர்க்கவும், படத்தின் புரொமோஷன்களுக்காக இந்தியாவில் சிறந்து விளங்கும் சமூக வலைதளங்களான ட்விட்டர், ஃபேஸ்புக் போன்றவை இன்டர்நெட்டில் ஆக்கிரமித்துள்ளது.

இந்நிலையில், இந்த ஆண்டு ட்விட்டர் ட்ரெண்ட்ஸ் டாப் 10 பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் தென்னிந்திய திரைப்படங்கள் மற்றும் நடிகர்கள் தொடர்பான ட்வீட்களே ஆதிக்கம் செலுத்தியுள்ளன. 

இதில் இந்தியளவில் முதல் 10 இடங்களில் 7 இடங்களை தென்னிந்திய சினிமா கைப்பற்றியுள்ளது. தளபதி விஜய் நடித்த ‘சர்கார்’ #Sarkar படத்தின் ஹேஷ்டேக் முதலிடத்தையும், அதைத் தொடர்ந்து ‘விஸ்வாசம்’ #Viswasam  இரண்டாவது இடத்தில் உள்ளது.

இதனைத்தொடர்ந்து,  4.மகேஷ் பாபுவின் ‘பரத் அனே நேனு’#BharatAneNenu,  4. ஜூனியர் என்.டி.ஆரின் ‘அரவிந்த சமேதா’ #AravindhaSametha, 5. ராம் சரணின் ‘ரங்காஸ்தலம்’ #Rangasthalam, 6. சூப்பர் ஸ்டாரின் ‘காலா’ #Kaala என ட்ரெண்ட் நீள்கிறது. மேலும், ட்விட்டரில் அதிக செல்வாக்கு பெற்ற மொமெண்ட்ஸாக விஜய்யின் ‘சர்கார்’ முதலிடத்திலும், ‘மீ டூ’ இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது. இதில் #Sarkar #MeToo #KarnatakaElection #KeralaFloods #Aadhaar #JusticeForAsifa #DeepVeer #IPL2018 #WhistlePodu #AsianGames2018 என்ற ஹேஷ்டேக்குகளும் இடம்பிடித்தன.

இதேபோல், அதிகம் லைக் செய்த ட்வீட்டாக, விராட் கோலியின் மனைவி அனுஷ்கா ஷர்மா, கார்வாசவுத் என்ற பண்டிகையின் போது எடுத்துக் கொண்ட புகைப்படம், சுமார் 2,15,000 லைக்ஸ்களை பெற்றுள்ளது. அதிகம் பேசப்பட்ட அரசியல் தலைவர்களின் டாப் 10 பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி முதலிடத்தையும், அவரை தொடர்ந்து காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும் உள்ளனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஐட்டம் டான்ஸுக்காகவே ஆட்டநாயகியை தேடிப் பிடிக்கும் நெல்சன்: ஜெயிலர் 2, ரஜினி ஃபீலிங்க்ஸ் நிறைவேறுமா?
சாப்பாட்டுக்காகவே போகிறோம்; கல்யாண வீட்டில் ஏன் கரண் ஜோஹர் சாப்பிடுவதில்லை? காரணம் என்ன?