
’பேட்ட’ பட விளம்பர யுக்திகளின் தொடர்ச்சியாக நேற்று வெளியிடப்பட்ட விஜய் சேதுபதியின் வில்லன் லுக் ச்ச்சும்மா ஒரு திசை திருப்பல்தான் என்றும் அவர் படத்தில் ஒரு பாஸிடிவான கேரக்டரில் அதுவும் ரஜினிக்கு மிகவும் வேண்டப்பட்டவராகவே நடிக்கிறார் என்கிறது ஒரு ரகஸிய வட்டாரம்.
‘பேட்ட’ படம் குறித்து பலருக்கும் தெரியாத ஒரு ரகசியம் அது ஒருமாதிரியான ‘தளபதி’யின் பார்ட் 2’ தான் என்பது. ஏனெனில் கார்த்திக் சுப்பாராஜ் மூலம் துவக்கத்தில் ’தளபதி பார்ட்2’வை இயக்கவே அனுமதி கேட்டிருந்தார்கள், அதற்கு மணிரத்னம் சம்மதிக்கவில்லை. அதற்குப் பின்னர் ரெடிபண்ணப்பட்ட கதையில் தளபதியின் சாயல் கொஞ்சம் கொஞ்சம் இருப்பதை கார்த்திக் சுப்பாராஜாவால் தவிர்க்கவே முடியவில்லை.
ஆக தளபதியில் மம்முட்டி நடித்த ஒரு பாத்திரம் போல்தான் விஜய் சேதுபதியின் கேரக்டர் இருக்கப்போகிறது. இன்னொரு பக்கம் ‘பிட்ஸா’ படத்தின் மூலம் கெத்தான ஹீரோவாக விஜய் சேதுபதியை அறிமுகப்படுத்திய கார்த்திக் சுப்பாராஜ், விஜய் சேதுபதியை அவ்வளவு லேசில் வில்லன் பாத்திரத்துக்கு இறக்கமாட்டார் என்பதும் இன்னொரு லாஜிக்.
இன்னொரு பக்கம் எப்படிப் பார்த்தாலும் ‘ஜித்து’ என்கிற பெயர் வில்லன் கேரக்டருக்கு கெத்து சேர்ப்பதாக இல்லவே இல்லை.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.