விஜய் நடிக்க இருப்பது அஜித்திடம் சுட்ட கதையாம்! அங்கே சுட்டு, இங்கே சுட்டு இப்போ தல தலையிலேயே கை வைத்த அட்லீ!?

Published : Nov 16, 2018, 02:51 PM ISTUpdated : Nov 16, 2018, 03:02 PM IST
விஜய் நடிக்க இருப்பது அஜித்திடம் சுட்ட கதையாம்! அங்கே சுட்டு, இங்கே சுட்டு இப்போ தல தலையிலேயே கை வைத்த அட்லீ!?

சுருக்கம்

சர்கார் சர்ச்சை தலைவலியில் சிக்கி இப்போதுதான் வெளியே வந்திருக்கிறார் விஜய். சர்கார் சக்ஸஸ் பார்ட்டியை கொண்டாடிய கையோடு, சில மாதங்கள் வெளிநாடு செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இதோ அடுத்த படத்தின் வேலையில் களமிறங்கிவிட்டார் தளபதி. கல்பாத்தி அகோரம் டீம் முதல் முறையாக விஜய் படத்தை தயாரிக்கிறது. அட்லீ -விஜய்-ஏ.ஆர்.ரெஹ்மான் என மெர்சல் கூட்டணி மீண்டும் இதில் இணைகிறது.

ஆயிரம்தான் விஜய் அதிரிபுதிரியான ஆக்‌ஷனை காட்டி நடித்தாலும் கூட தொடர்ந்து அவரது படங்கள் ‘கதை திருட்டு’ விவகாரத்தில் சிக்கிக் கொண்டே இருக்கின்றன. முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த கத்தி, சர்கார் இரண்டும் கடும் சர்ச்சைக்குள் சிக்கி அவரது டேமேஜை உரசிப் பார்த்தன. ஆனாலும் ஏ.ஆர்.முருகதாஸை தனது ஸ்வீட் இயக்குநர்கள் பட்டியலில்தான் வைத்துள்ளார் விஜய். அவருக்கு நிகரான இடத்தில் அட்லீயை வைத்துள்ளார் தளபதி. 

ஆனாலும் முருகதாஸை விட மோசமான பெயரை சம்பாதித்து வைத்துள்ளார் அட்லீ. ‘முருகதாஸாவது யாரோ எழுதி ஆனால் இன்னும் படமாகாத கதையைதான் திருடுவார். ஆனால் அட்லீயோ எப்பவோ வெளிவந்து சக்கபோடு போட்ட படத்தின் கதை, திரைக்கதை மற்றும் சீன்களையே திருடுவார். இவர்கள் இருவரும்தான் விஜய்யின் ஆஸ்தான இயக்குநர்கள். அப்படியானால் விஜய்யின் லட்சணத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள்!’ என்று கிழி கிழியெனதான் கிழிக்கின்றனர் இணைய தளங்களில். 

இந்நிலையில் சர்கார் சர்ச்சை தலைவலியில் சிக்கி இப்போதுதான் வெளியே வந்திருக்கிறார் விஜய். சர்கார் சக்ஸஸ் பார்ட்டியை கொண்டாடிய கையோடு, சில மாதங்கள் வெளிநாடு செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இதோ அடுத்த படத்தின் வேலையில் களமிறங்கிவிட்டார் தளபதி. கல்பாத்தி அகோரம் டீம் முதல் முறையாக விஜய் படத்தை தயாரிக்கிறது. அட்லீ -விஜய்-ஏ.ஆர்.ரெஹ்மான் என மெர்சல் கூட்டணி மீண்டும் இதில் இணைகிறது.

 
 
இந்தப் படத்துக்கான பூஜை போடப்பட்டு விட்ட நிலையில், விஜய்யை வைத்து அட்லீ எடுக்கப்போகும் கதையின் மைய விஷயமும், அஜித்தை வைத்து சிறுத்தை சிவா இயக்கி முடிக்கப்போகும் விஸ்வாசம் படக்கதையின் ஹைலைட் விஷயமும் ஒன்றேதான்! என்று கோடம்பாக்கத்தில் ஒரு சூறாவளி சுழன்று வீச துவங்கியுள்ளது. இதுகுறித்துப் பேசும் இளம் உதவி இயக்குநர்கள் “கதை, திரைக்கதை மற்றும் காட்சிகள் திருட்டு விஷயத்துல அட்லீயை அடிச்சுக்க யாருமே இல்லை. அவரோட படங்களை எடுத்துப் பாருங்களேன்...பழைய ‘மெளனராகம்’ படம் தான் இவரோட ‘ராஜா ராணி’! பழைய ‘சத்ரியன்’ படத்தோட கதைதான் ‘தெறி’, பழைய ‘மூன்றுமுகம்’ படத்தின் கதைதான் ‘மெர்சல்’. இதை யாராச்சும் மறுக்க முடியுமா? அட அட்லீயே அதை மறுக்க முடியுமா? 

இப்படிப்பட்டவர் இப்போ மீண்டும் விஜய்யை வெச்சு எடுக்குற படம் அஜித் படத்தின் கதையின் முக்கிய சாராம்சம்ன்னு தகவல் வர்றதை நம்பாம இருக்க முடியலை. ஏன்னா அட்லீயின் பயோடேட்டா அப்படி. இந்த தகவல் விஜய், அஜித் ரெண்டு பேரின் காதுகளுக்கும் போயிடுச்சு. விஜய்யோ, அட்லீட்ட கதை கேட்கிறப்பவே ‘உண்மையின் இது உங்களதுதானா தம்பி, பழைய படங்கள் மாதிரி ஏதாச்சும் சிக்கல் வந்துடாதே?’ன்னு கேட்டுட்டுதான் கமிட் ஆனார். என்னுடையது, என்னுடையது!ன்னு கற்பூரம் ஏத்தாத குறையாக சத்தியம் பண்ணுன அட்லீ இப்போ இப்படியொரு பிரச்னையில் சிக்கியிருக்கிறதால விஜய் கண்கள் சிவக்க கோபப்பட்டுவிட்டார். 

அஜித்தின் கவனத்துக்கு இந்த விஷயம் போனதும், விஜய்யின் இயக்குநர்களோட லட்சணத்தை நினைச்சு தலையிலடிச்சிருக்கார். உண்மையில் அஜித் கிரேட்தான். என்னதன் ஃபிளாப் படம் கொடுத்தாலும் கூட அவரது படக்கதைகள் திருடப்பட்டவையா இருக்கிறதில்லையே.” என்கின்றனர் நறுக் வார்த்தைகளில். ’தளபதி 63’ கதை குறித்து இப்படி பரபரக்கும் தகவல்களில் உண்மை உள்ளதா? என்பதை அட்லீதான் தெரிவிக்க வேண்டும்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Ethirneechal Thodargiradhu : ஜனனியின் பிசினஸுக்கு வில்லனாக மாறும் சக்தி... கதைக்களத்தில் எதிர்பாரா ட்விஸ்ட்
Premji Amaran Songs: என்ன கொடுமை சார் இது?" - பிரேம்ஜி பாடிய டாப் ஹிட் பாடல்களின் ஆச்சரியப் பட்டியல்!