
சிந்தியா லூர்டே நடிக்க, அறிமுக இயக்குனர் தினேஷ் தீனா கதை, திரைக்கதை , வசனம் எழுதி இயக்கியுள்ள திரைப்படம் "அனலி".
அனலி படத்தின் ட்ரைலர் வெளியீட்டுவிழாவில் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அப்போது நாயகி மற்றும் தயாரிப்பாளரான சிந்தியா லூர்டே பத்திரிக்கையாளர்களை சந்தித்து அனலி படத்தைப் பற்றியும், தனது சினிமா அனுபவங்களையும், தயாரிப்பாளர் எவ்வித விளைவுகளை சந்திக்கின்றார் எவ்வளவு செலவு செய்கின்றார் என்பதை பற்றியும் பகிர்ந்து கொண்டார்.
விஜயசாந்திக்கு பின் நான் தான் ஆக்ஷன் ஹீரோயின்: சிந்தியா லூர்டே பேசும்போது, "வர்ணாஷ்ரமம், தினசரி படங்களுக்கு பிறகு அனலி என்னுடைய மூன்றாவது தயாரிப்பு. இந்த படத்தில் நானே நாயகியாகவும் நடித்திருக்கிறேன். ஆனால் இதில் வழக்கமான ஹீரோயின் கதாபாத்திரம் இல்லை. இது கொஞ்சம் தனித்துவமான இருக்கும். முழுமையாக ஆக்சன் கன்டென்ட் ஆகவே இருக்கும் இந்த படத்தில் கதாநாயகன் கிடையாது. ஹீரோயினி மட்டும்தான் மற்றும் வில்லன்கள் இருப்பார்கள் என்றும் கூறியுள்ளார்.
90களில் தமிழ் சினிமாவில் விஜயசாந்தி மேடம் ஆக்ஷன் படங்களில் நடித்திருக்கிறார். ஆனால் இந்த படத்தில் முதன் முறையாக ஒரு படம் முழுவதும் ஆக்ஷன் ஹீரோயினாக நான் நடித்திருக்கிறேன். நாயகர்களே நடிக்க தயங்கும் காட்சிகளிலும் டூப் போடாமல் ரிஸ்க் எடுத்து நானே நடித்திருக்கிறேன். ஆக்ஷன் காட்சிகளில் எல்லாமே ரொம்பவே கஷ்டப்பட்டு நடித்திருக்கிறேன்.
தளபதியின் ஹீரோவாக நடிப்பேன் என்று twistவைத்த நடிகை:
2026 இல் கண்டிப்பாக தேர்தல் முடிவுக்குப் பிறகு தளபதி விஜய் என் ப்ரொடக்ஷனில் என்னுடன் ஜோடியாக நடிப்பார் அது கண்டிப்பாக நடக்கும் எப்படி என்று நடக்கும் என்று எல்லாம் தெரியாது ஆனால் நடக்கும் என்றும் உறுதியாக கூறியுள்ளார் சிந்தியா லூர்டே
ஜன நாயகன் படத்துக்கு முன் ரிலீசாகும் அனலி: ஜனவரி 2 ஆம் தேதி வெளியாக இருக்கும் அனலி திரைப்படத்திற்கு ஜன நாயகன் படத்திற்கும் பராசக்தி படத்திற்கும் இடையில் அனலி கண்டிப்பாக திரையருங்குகளில் கண்டிப்பாக ஓடும் என்றும் நான் இவர்களுக்கு ஒரு போட்டியாக என்னுடைய படம் இருக்கும் என்றும் நிச்சயமாக என்னுடைய படத்திற்கு அதிக வசூல் செய்யும் என்றும் சிந்தியா லூர்டே விஜய்க்கு சவால் விட்டு உள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.