அட்லீயின் அடுத்த படத்தில் இதுவரை நடித்திராத கேரக்டரில் நடிக்கும் விஜய்! வெளியான புது தகவல்!

By manimegalai aFirst Published Nov 13, 2018, 6:39 PM IST
Highlights

தீபாவளிக்கு வெளியான சர்கார் திரைப்படம் தற்போது அனைத்து திரையரங்குகளிலும்  சக்க போடு போட்டு வருகிறது. படம் வெளியானதில் இருந்து மிகப்பெரிய பிரச்சனைகளை சந்தித்து வந்தாலும் அனைத்தையும் கடந்து, வசூலில் சாதனை படைத்துள்ளதாக பல செய்திகள் உலா வந்துகொண்டிருக்கிறது.

இந்த படத்தை தொடர்ந்து விஜய் மூன்றாவது முறையாக இயக்குனர் அட்லீ இயக்கத்தில் தன்னுடைய 63வது படத்தை நடிக்க உள்ளார். 

தெறி, மெர்சல், படத்தை தொடர்ந்து இந்தக் கூட்டணியில் உருவாக இருக்கும் இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க இருப்பதாக ஏற்கனவே  தகவல் வெளியாக உள்ள நிலையில்... தற்போது புதியதாக ஒரு தகவல் வெளியாகி விஜய் ரசிகர்களை மேலும் சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.

அதாவது விஜய் அடுத்ததாக நடிக்க உள்ள 63 வது படத்தில்... இது வரை நடித்திராத, சிபிஐ அதிகாரி வேடத்தில் நடிக்க உள்ளதாகவும். இந்த திரைப்படம் காதல் கதை, மற்றும் அரசியல் கதைக்கு அப்பார்ட்பட்ட திரில்லர் படமாக உருவாக உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இது குறித்து தற்போது வரை எந்த ஒரு அதிகாரபூர்வ தகவலும் வெளியாகவில்லை. 
 
click me!