
’நான் ஒரு திறந்த புத்தகம் என்று எத்தனையோ நடிகைகள் பேட்டி அளித்திருக்கலாம். அதில் ஓரளவுக்கு உண்மையின் பக்கத்தில் இருந்தவர் என்றால் அது நடிகை ஷகீலாதான். ‘80ல் துவங்கி 90 களின் துவக்கம் வரை தமிழ், மலையாள ரசிகர்களின் தூக்கத்தை தனது முந்தானையில் முடிந்து வைத்திருந்தவர் ஷகீலா...அது சரி என்னப்பா ஆச்சு அவருக்கு என்று பதறாதீர்கள்.
இந்திரஜித் லங்கேஷ் என்பவர் கடந்த மார்ச் மாதம் துவங்கிய மும்மொழிப் படமான ஷகீலாவின் வாழ்க்கை வரலாறு படத்தின் ஷூட்டிங் ஒருவழியாக முடிவுக்கு வந்துவிட்டது. இத்தகவலை பகிர்ந்திருப்பவர் படத்தில் ஷகீலாவாக களம் கண்டிருக்கும் நடிக ரிச்சா சதா.
‘ஷகீலாவின் கதை என்பதால் அவரளவுக்கு ஆபாசமாக நடிக்க முடியுமா என்ற குழப்பம் துவக்கத்தில் இருந்தது. ஆனால் படத்தின் மையக்கதை என் எண்ணத்தை அடியோடு மாற்றிவிட்டது. இப்படத்தில் நடிப்பதற்காக நடிகை ஷகீலாவுடன் சில நாட்கள் பழக நேர்ந்ததும் இன்னும் தெளிவாகிவிட்டேன். இப்படத்தில் நீங்கள் கண்டிப்பாக ஒரிஜினல் ஷகீலாவைப் பார்க்கலாம்’ என்று தனது தாராள நடிப்புக்கு தானே உத்தரவாதம் தருகிறார் ரிச்சா.
படத்தின் துவக்கத்தில் ஒரிஜினல் ஷகீலாவும் சில நிமிடங்கள் தோன்றி, ‘செக்ஸ் படங்கள் பார்த்த பழக்கம், என் படங்கள் பார்த்ததோடு முடியட்டும். இனிமே நல்ல பிள்ளைகளா மாறி நாட்டுக்கு நல்லது செய்ற வழியைப் பாருங்க’ என்று அட்வைஸ் பண்ணுவது போல் கொஞ்சம் பேசுகிறாராம்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.