லீக்கான ‘தளபதி 64’பட டைட்டில்...அதிர்ச்சியில் விஜய், லோகேஷ் கனகராஜ்...

By Muthurama Lingam  |  First Published Nov 22, 2019, 2:01 PM IST

தளபதி 64 என்று பெயரிடப்பட்டுள்ள விஜய்யின் அடுத்த படப் படப்பிடிப்பு இரண்டாவது ஷெட்யூலாக டெல்லியில் நடைபெற்று வருகிறது. இந்த ஷெட்யூலில் விஜய், பட நாயகி மாளவிகா மோகனன், ஆண்டனி வர்கீஸ் ஆகியோர் கலந்துகொண்டு வரும் நிலையில் இன்னும் சில தினங்களில் விஜய் சேதுபதியும் கலந்துகொள்ள உள்ளார்.

vijay movie thalapathi 64 title leaked

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் ‘தளபதி 64’படத்தின் உத்தேச தலைப்பு வலைதளங்களில் லீக்காகியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த இயக்குநர் உதவி இயக்குநர்களிடம் மிகவும் கோபப்பட்டதாக படக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.vijay movie thalapathi 64 title leaked

தளபதி 64 என்று பெயரிடப்பட்டுள்ள விஜய்யின் அடுத்த படப் படப்பிடிப்பு இரண்டாவது ஷெட்யூலாக டெல்லியில் நடைபெற்று வருகிறது. இந்த ஷெட்யூலில் விஜய், பட நாயகி மாளவிகா மோகனன், ஆண்டனி வர்கீஸ் ஆகியோர் கலந்துகொண்டு வரும் நிலையில் இன்னும் சில தினங்களில் விஜய் சேதுபதியும் கலந்துகொள்ள உள்ளார்.

Tap to resize

Latest Videos

டெல்லி படப்பிடிப்பில் விஜய் கலந்துகொண்ட புகைப்படங்கள் அடிக்கடி லீக்காகி வலைதளங்களில் வைரலாகிவரும் நிலையில் தற்போது படத்துக்கு வைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள டைட்டிலும் ரிலீஸாகியுள்ளது. நீட் தேர்வு மற்றும் மருத்துவ படிப்பில் உள்ள ஊழல்கள் குறித்து இப்படம் பேசுவதால் படத்துக்கு ‘டாக்டர்’என்ற தலைப்பை இயக்குநரும் விஜய்யும் உறுதி செய்துள்ளார்களாம். பட ரிலீஸுக்குப் பின்னர் ரசிகர்கள் தன்னை டாக்டர் விஜய் என்று அழைப்பார்கள் என்று குஷியாக இருந்தாராம் விஜய். இந்த தலைப்பையும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் புத்தாண்டு தினத்தை ஒட்டி வெளியிட படக்குழு முடிவு செய்திருந்த நிலையில் உதவி இயக்குநர்கள் மூலமாக முன்பே ரிலீஸாகிவிட்டதால் அதிர்ச்சி அடைந்த இயக்குநர் லோகேஷ் கனகராஜ் உதவி இயக்குநர் ஒவ்வொருவரிடமும் விசாரணை நடத்தி வருகிறாராம்.

vuukle one pixel image
click me!
vuukle one pixel image