
தமிழ் சினிமாவில், காலம் காலமாக நடிகர்களின் வாரிசுகள் திரையுலகில் அறிமுகமாகி வருகிறார்கள். ஆனால் அப்படி அறிமுகமாகும் அனைவருமே வெற்றி பெருகினார்களா என்றால் அது சந்தேகம் தான். அந்த வகையில் பிரபல நடிகர் விக்ரமின் மகன், துருவ் கதாநாயகனாக அவதாரம் எடுத்துள்ள திரைப்படம் 'ஆதித்ய வர்மா'.
ஏற்கனவே இயக்குனர் பாலாவை வைத்து இந்த படத்தை 'வர்மா' என்கிற பெயரில் இயக்கிய, E4 என்டர்டயன்மெண்ட் நிறுவனம், இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவில்லை என கூறி நிராகரித்து விட்டு, மீண்டும் கிரிசாய என்கிற இயக்குனரை வைத்து இப்படத்தை இயக்க உள்ளதாக அறிவித்தது.
அதன் படி, இரண்டாவது முறையாக இயக்கப்பட்ட இந்த படத்திற்கு 'ஆதித்ய வர்மா' என பெயரிடப்பட்டது. மேலும் துருவை தவிர அணைத்து கதாபாத்திரங்களும் மாற்றம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகி இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள இப்படம், தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. முதல் படத்திலேயே துருவ் தன்னுடைய வெற்றிப்பயணத்தை துவங்கியுள்ளதாக பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவரும் சமூக வலைதளத்தில், துருவிற்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
தமிழில் இன்று வெளியாகி நன்கு வரவேற்பை பெற்றுள்ள இந்த படம், தெலுங்கில், கடந்த 2017 ஆம் ஆண்டு நடிகர் விஜய் தேவாரக்கொண்டா மற்றும் பூனம் பாண்டே ஆகியோர் நடிப்பில் வெளியாகி, மிகப்பெரிய வெற்றி பெற்ற 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் ரீமேக்காக எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.