விஜய்க்கு வாக்காளர் அடையாள அட்டை தர மறுத்த அரசாங்கம்; சர்கார் படத்தில் முக்கிய திருப்பம்;

By manimegalai aFirst Published Aug 28, 2018, 3:17 PM IST
Highlights

தளபதி விஜய் நடிப்பில் தயாராகி வரும் சர்கார் திரைப்படம் வரும் தீபாவளி அன்று ரிலீசாக இருக்கிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கம், ஏ.ஆர்.ரஹ்மான் இசை என கலக்கல் கூட்டணியில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் ரசிகர்கள் 

தளபதி விஜய் நடிப்பில் தயாராகி வரும் சர்கார் திரைப்படம் வரும் தீபாவளி அன்று ரிலீசாக இருக்கிறது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கம், ஏ.ஆர்.ரஹ்மான் இசை என கலக்கல் கூட்டணியில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த அதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது என்பது அனைவரும் அறிந்ததே.

மெர்சலில் மக்களின் அடிப்படை தேவைகளில் ஒன்றான மருத்துவம் இன்று எந்த நிலையில் இருக்கிறது என உரக்க சொன்னது போல இந்த சர்கார் திரைப்படத்தில் மக்களின் மற்றுமொரு உரிமை குறித்து மனதில் பதியும்படி ஏ.ஆர்.முருகதாஸ் கூறி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.


 

இந்த தகவலின் படி வெளிநாட்டில் மிகப்பெரிய தொழிலதிபராக இருக்கும் விஜய் சில பல காரணங்களால் இந்தியாவிற்கு வருகை புரிகிறார். ஒரு முக்கிய தருணத்தில் தான் அவருக்கு இங்கு வாக்காளர் அடையாள அட்டை என்பதே இல்லை என தெரியவருகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த விஜய், அந்த வாக்காளர் அட்டையை பெற முயற்சி எடுக்கிறார். ஆனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அவரை அலட்சியம் செய்து சுற்ற விடுகின்றனர். 

இதனால் கோபமான விஜய் தன்னுடைய உரிமையை நிலை நாட்ட எடுத்த முயற்சியில் அவர் அடையப்போகும் வெற்றி தான் மீதி கதை. இதில் தன்னை அலட்சியம் செய்தவர்களை அவர் பழிவாங்க போகிறார் என தெரிவித்திருப்பதால், ஒருவேளை அவர் தேர்தலில் போட்டி இட்டு இதில் அரசியல்வாதி ஆக போகிறாரோ எனவும் ஒரு கேள்வி இப்போது ரசிகர்கள் மனதில் ஏற்பட்டிருக்கிறது. இன்னும் சில மாதங்களில் திரைக்கு வர இருக்கும் இந்த 'சர்கார்' படம் மீதான எதிர்பார்ப்பு இதனால் தற்போது மேலும் அதிகரித்திருக்கிறது.


 

click me!