இந்தியாவையே அதிர வைத்த மெர்சல் படம் சர்வ தேச அளவில் எத்தனையாவது இடம் தெரியுமா?

 
Published : Oct 27, 2017, 06:54 PM ISTUpdated : Sep 19, 2018, 01:21 AM IST
இந்தியாவையே அதிர வைத்த மெர்சல் படம் சர்வ தேச அளவில் எத்தனையாவது இடம் தெரியுமா?

சுருக்கம்

Vijay Mersal Worldwide Gross Is Now A Lock

தமிழ் சினிமாவில் எந்தவொரு படமும் சந்திக்காத பிரச்சனைகளை சந்தித்தது மெர்சல் என்று தான் சொல்லணும் இருந்தும் இவை அனைத்தையும் தவிடுபொடியாக்கி வசூலில் மாபெரும் சாதனையை புரிந்துள்ளது. நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என ஒட்டுமொத்தமாக மன உலச்சல் ஏற்பட்டாலும் பொருள் நஷ்டம் இல்லை என்று தான் சொல்லணும்.

அதுமட்டுமல்ல தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான ரஜினி, கமல் ஆகியோரின் பாராட்டுக்களை பெற்றிருக்கிறது விஜய்யின் மெர்சல். அதோடு இந்திய மக்கள் அனைவரும் பாராட்டும் படமாக அமைந்துள்ளது என்று சொன்னால் மிகையாகது காரணம் இந்த படத்தில் இடம் பெற்றிருந்த சில வசனங்களால் மிக பெரிய சர்ச்சைகள் ஏற்பட்டு பின்னர் அவையே படத்திற்கு மிக பெரிய வெற்றியை தேடி தர வழி வகுத்தது.

வட இந்தியாவின் முன்னணி தொலைக்காட்சிகளிலும் முதல் பிரச்சனைகளாக அலசும் நிகழ்ச்சி இது தான் இதனால் படத்தை அனைவரையும் பார்க்க தூண்டவைத்துவிட்டது. இந்த நிலையில் இப்படம் சர்வதேச அளவில் கடந்த நான்கு நாட்களில் வசூலில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளதாம். முதல் இரண்டு இடத்தில் KingsmanTheGoldenCircle, GeoStorm போன்ற படங்கள் இடம் பிடித்துள்ளன.

அதேபோல, உலகம் முழுவதும் மாஸ் காட்டி வரும் மெர்சல் படம் இதுவரை ரூ 175 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழகத்தில் மட்டும் படம் ரூ 90 கோடி வசூலை தாண்டி கபாலி பட சாதனையை முறியடித்துள்ளது. இதிலிருந்து அடுத்த தமிழ் சினிமாவின் சூப்பர்ஸ்டார் தளபதி விஜய் தான் என நிரூபித்துவிட்டார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

'ரவுடி ஜனார்தனா' கிளிம்ப்ஸ்: குறி தப்பாது! மிரட்டலான கேங்ஸ்டர் அவதாரத்தில் விஜய் தேவரகொண்டா!
செந்தில் பேச்சை கேட்காத பாண்டியன்: இருந்தாலும் இம்புட்டு வைராக்கியம் ஆகாது: குடும்பத்தில் வெடிக்கும் அடுத்த சண்டை!