
திரைத்துறையைப் பிடிக்காதவர்கள் என்று யாரும் இருந்து விட முடியாது. இன்று திரைத்துறையில் சாதித்துள்ள பல இயக்குனர்கள் ஏதோ ஒரு கிராமத்தில் இருந்து வீட்டில் சொல்லிக் கொள்ளாமலேயே வந்து துணை இயக்குனராக இருந்து பின் வெற்றி இயக்குனர்களாக இருப்பவர்கள் பலர்.
அப்படி கோடம்பாக்கத்தில் மட்டும் ஐந்தாயிரம் இளைஞர்களுக்கும் மேல் உள்ளனர். இந்நிலையில் வளசரவாக்கத்தில் உள்ள ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் துணை இயக்குனராக வேலை செய்யும் ஐந்து நண்பர்கள் தங்கியுள்ளனர். அதில் அகில் குமார் என்கிறவருக்கும், கார்த்தி என்பவருக்கும் தொலைக்காட்சியில் படம் பார்ப்பதில் ஏதோ பிரச்சனை வந்துள்ளது.
ஒரு கட்டத்தில் ஆத்திரத்தில் கார்த்தி, ரிமோட்டை தரமுடியாது எனக் கூறி அகில் குமாரை தள்ளி விட்டதாகக் கூறப்படுகிறது. இதில் அகிலுக்கு மண்டையில் பலத்த காயம் ஏற்பட்டு அதே இடத்தில் உயிர் இழந்தார். தற்போது கார்த்தியை போலீசார் கைது செய்து அவரிடம் இது குறித்து விசாரணை செய்து வருவதாகக் கூறப்படுகிறது.
பல்வேறு கனவுகளோடு, குடும்பம், சொந்த பந்தங்களைப் பிரிந்து வந்து எதிர்கால கனவுகளை நோக்கி பயணம் செய்துகொண்டிருந்த இரு துணை இயக்குனர்களின் வாழ்க்கையே கோபத்தால் இன்று கேள்விக்குறியாக மாறியுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.