
தமிழக திரைப்படத்யாரிப்பாளர் சங்கமும், அவுட்டோர் யூனிட் அசோசியனும் இணைந்து டெக்னீசியன் யூனியன் ஒன்றை துவங்கியுள்ளது.
தமிழ் திரைப்படத்யாரிப்பாளர் சங்கமும், அவுட்டோர் யூனிட் அசோசியனும் இணைந்து புதியதாக துவங்கியுள்ள டெக்னீசியன் யூனியனில் ஏற்கனவே தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளத்தில் இருந்த டெக்னீசியன் யூனியனிலிருந்து விலகி பலரும் இணைந்துள்ளனர்.
அவர்களுக்கு அதற்கான புதிய உறுப்பினர் அடையாள அட்டையை தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் அவுட்டோர் யூனிட் அசோசியனின் தலைவர் திரு. முத்துசாமி அவர்களும் வழங்கினார்கள்.
தலைவர் விஷால் பேசியது:- புதியதாக துவங்கப்பட்டுள்ள டெக்னீசியன் யூனியன் சிறப்பாக செயல்பட என்னுடைய வாழ்த்துக்கள்.உங்களுக்கு என்ன குறைகள், என்ன பிரச்சனைகள் இருந்தாலும் எங்களிடம் நீங்கள் தயங்காமல் கூறலாம்.தயாரிப்பாளர் சங்கம் உங்களுடன் எப்போதும் இருக்கிறது என்றார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.