
இளையதளபதி விஜய் பொதுவாகவே குழந்தைகள் மீது அதிக பாசம் கொண்டவர் என்பது அனைவரும் அறிந்ததுதான். இந்நிலையில் சேலம் அம்மாபேட்டையை சேர்ந்த 3 வயது எல்.கே.ஜி மாணவி நேத்திரா என்பவர் கடந்த பிப்ரவரி மாதம் கோவாவில் நடைபெற்ற சர்வதேச போட்டிக்கான தேர்வில் 4 வயதுக்குட்பட்ட பிரிவில் கலந்துகொண்டு இரண்டு தங்கப்பதக்கங்களை பெற்று தமிழ் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
மேலும் வரும் மே மாதம் தாய்லாந்தில் நடைபெறவுள்ள ஏசியன் ரோலர் ஸ்போர்ட்ஸ் சர்வதேச போட்டி 2017" என்ற போட்டியில் நேத்திரா கலந்துகொள்ள உள்ளார்.
சர்வதேச போட்டியில் பங்கேற்கும் முன்னர் அம்மாணவியை இளையதளபதி விஜய் அவர்களிடம் காண்பித்து அவரின் பாராட்டையும், ஊக்குவிப்பையும் பெற அவரது பெற்றோர்கள் ஆசைப்பட்டனர்.காரணம் அவர் தீவிர விஜய் ரசிகை என்பதால்.
இதனை கேள்விப்பட்ட இளையதளபதி விஜய் அவர்கள் தமிழ்நாடு ஸ்கேட்டிங் அசோஷியேஷன் உறுப்பினர்களையும், Josh Queen Club உறுப்பினர்களையும், மாணவி, பெற்றோர்களையும், நேத்திராவையும் நேரில் அழைத்து மனமார்ந்து பாராட்டி, ஊக்குவித்தார்.
இச்சந்திப்பின்போது விஜய் உடன் தமிழ்நாடு ஸ்பீட் ஸ்கேட்டிங் அசோஷியேஷனின் பொதுச்செயலாளர் மற்றும் முக்கிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.
பிஸியாக தன்னுடைய படங்களில் அவர் நடித்து வந்தாலும், குழந்தையை ஊக்குவிக்கும் வகையில் அவர் செய்த காரியத்தை ரசிகர்கள் பலர் பாராட்டிவருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.