
லைகா சார்பில் கட்டப்பட்ட வீடு வழங்கும் விழாவுக்காக இலங்கை செல்லவிருந்த நடிகர் ரஜினிகாந்தின் பயணம் ரத்து செய்யப்பட்டது.
நடிகர் ரஜினிகாந்த் 2.0 படத்தில் நடித்து வரும் நிலையில் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா மேலாளர் சுபாஷ்கரன் கட்டியுள்ள வீடு வழங்கும் விழாவுக்கு இலங்கைக்கு செல்லவிருந்தார்.
இந்நிலையில் விடுதலை சிறுத்தை கட்சி திருமாவளவன், மதிமுக பொது செயலாளர் வைகோ ஆகியோர் தங்களது கணடனத்தை பதிவு செய்திருந்தனர்.
இதனால் இவர்களின் கோரிக்கையை ஏற்ற ரஜினிகாந்த் தந்து பயணத்தை நிறுத்தி விட்டார். இத குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் தாம் ஒரு அரசியல்வாதியல்ல என்றும் தான் ஒரு கலைஞன்.
இந்த பயணத்தை அரசியல் ஆகவேண்டாம் என்றும் திருமாவளவன்,வைகோ கூறிய காரணங்களை முழுமையாக ஏற்கமுடியவில்லை என்றும் புனித போர் நடந்த இடத்தை காணும் பாக்கியம் மீண்டும் கிடைத்தால் அதை தடுக்காதீர்கள் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை தாம் நாளிதழில் படிக்கும்போது நெஞ்சம் பதறுகிறது என்றும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.