
உலக காசநோய் தினமான மார்ச் 24 இல் கே பி தாசன் சாலை, ஆழ்வார்பேட்டையில் காலை 11 மணி முதல் 12 மணிவரை காசநோய் குறித்த விழிப்புணர்வு ஊட்டும் மனித சங்கிலி நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
ஒவ்வொரு வருடமும் 10 முதல் 15 லட்சம் பேர் காச நோயால் இறக்கின்றார்கள். இந்த அச்சுறுத்திம் நோய் பெரும்பாலும் வளர்ச்சியடைந்து கொண்டிருக்கும் நாடுகளில் அதிகமாகக் காணப்படுகிறது.
அதுகுறித்த விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் விதமாக 1882 இல் டாக்டர் ராபர்ட் குச் காசநோய்க்குக் காரணமான டிபி பாசிலஸ் என்கிற கிருமியைக் கண்டுபிடித்து சக விஞ்ஞானிகளை மலைக்க வைத்த தினமான மார்ச் 24 உலக காச நோய் தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.
உலக காசநோயாளிகளில் 25% பேர் இந்தியாவில் இருக்கிறார்கள். திருத்தியமைக்கப்பட்ட காசநோய் கட்டுப்பாட்டு திட்டம் செயல்பட்ட போதிலும் பெரிய அளவில் காசநோய் பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறார்கள். காசநோய், மசடைந்த காற்று, சளி, இருமல் மற்றும் சளியைக் கண்ட இடத்தில் சிந்துவதால் துப்புவதால் காசநோய் பரவுகிறது.
ரோட்டரி சங்கமும் ஷுத்தா, ஹியுமா சிறப்பு மருத்துவமனைகளும் மற்றும் SIET கல்லுரி மாணவிகள் இணைந்து உலக காசநோய் தினமான மார்ச் 24 இன்று இந்த விழிப்புணர்வு மனிதச்சங்கிலிக்கு ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சியில் நடிகர் ஆரி, சமூக.சேவகர் நிஷா தோட்டா உட்பட முன்னணி மருத்துவர்கள் மற்றும் ரோட்டரி சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த விழிப்புணர்வில் நடிகர் ஆரி கலந்துக்கொண்டு, காச நோய் விழிப்புணர்வை பொதுமக்களிடம் ஏற்படுத்தினார்... இது குறித்து அவர் கூறுகையில் உலகில் உள்ள உயிர்கள் மிகவும் விலைமதிப்பற்றது என்றும் அதனால் தயவு செய்து அலட்சியப்படுத்தாமல் சளி, தும்மல் என எந்த ஒரு உடல்நலக்குறைவு ஏற்பட்டாலும் அதனை மருத்துவரிடம் பரிசோதனை செய்துகொள்ளுமாறு கூறினார்....
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.