ஒரே நாளில் யூ-டியூப்பை மிரள வைத்த “மாஸ்டர்”... எத்தனை கோடி பேர் பார்த்திருக்காங்க தெரியுமா?

By Kanimozhi PannerselvamFirst Published Nov 15, 2020, 6:07 PM IST
Highlights

நேற்று சரியாக மாலை 6 மணிக்கு சன் யூ-டியூப் சேனலில் ஒளிபரப்பப்பட்ட அந்த டீசர் ஒரே நாளில் 20 மில்லியன் வியூஸ்களை கடந்து ஓட்டுமொத்த இந்திய திரையுலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளது. 

லோகேஷ் கனகராஜ் - விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள “மாஸ்டர்” திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் 9ம் தேதியே ரிலீஸ் செய்யப்பட்டிருக்க வேண்டியது. ஆனால் மார்ச் மாதமே இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் படை எடுத்த, கொரோனா தொற்று காரணமாக மாஸ்டர் படம் ரிலீஸ் ஆகாமல் போனது. அதே நேரம், மாஸ்டர் படம் ரிலீசாகும் என காத்திருந்த ரசிகர்களின் கனவும் இன்னும் நிறைவேறாமல் உள்ளது.

 

இதையும் படிங்க: உடலில் ஆடையின்றி... கடற்கரையில் பிக்பாஸ் ஜூலி செய்த காரியம்... வைரல் போட்டோ...!

இந்த படத்தில் முதன் முறையாக தளபதி விஜய்க்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.அதுமட்டுமின்றி மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா உட்பட ஏராளமான நட்சத்திர பட்டாளங்கள் இந்த படத்தில் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அனைத்து ரசிகர்கள் மத்தியிலும் தாறுமாறாக எகிறியுள்ளது. தீபாவளி ஸ்பெஷல் ட்ரீட்டாக நேற்று மாஸ்டர் படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. இந்த படத்தில் ஜான் துரைராஜ் (ஜேடி) என்ற கதாபாத்திரத்தில் விஜய் நடித்திருப்பது உறுதியாகியுள்ளது. விஜய்க்கே உரித்தான அதிரடி சண்டை காட்சிகள் இடம் பெற்றுள்ளதால் ரசிகர்கள் செம்ம ஹேப்பியில் உள்ளனர். 

 

இதையும் படிங்க: கழுத்தில் மாலையுடன் மணப்பெண் நயன்தாரா... மாப்பிள்ளை விக்னேஷ் சிவனை வலைவீசி தேடும் ரசிகர்கள்... வைரல் போட்டோஸ்!

நேற்று சரியாக மாலை 6 மணிக்கு சன் யூ-டியூப் சேனலில் ஒளிபரப்பப்பட்ட அந்த டீசர் ஒரே நாளில் 20 மில்லியன் வியூஸ்களை கடந்து ஓட்டுமொத்த இந்திய திரையுலகையே திரும்பி பார்க்க வைத்துள்ளது.  காலை முதலே 16 மணி நேரத்தில் 16 மில்லியன் வியூஸ்களை கடந்ததாக மாஸ்டர் டீசரை கொண்டாடி வந்த ரசிகர்கள், அடுத்ததாக இந்தியாவிலேயே அதிகம் லைக் செய்யப்பட்ட டீசர் என்பதற்காக #MasterMostLikedTeaser என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி தேசிய அளவில் ட்ரெண்ட் செய்து வந்தனர். அதற்கு தற்போது 20 மில்லியனை கடந்துவிட்டதால் #MasterTeaserRecords என்ற ஹேடேக்கை உருவாக்கி கொண்டாடி வருகின்றனர். 

click me!