தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவது இவ்ளோ ஈஸியா? உறுப்பினர் சேர்க்கையை தொடங்கிவைத்து விஜய் கொடுத்த விளக்கம்

By Ganesh A  |  First Published Mar 8, 2024, 6:13 PM IST

நடிகர் விஜய் தன்னுடைய தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான செயலியை தொடங்கி வைத்து அதில் முதல் ஆளாக தன்னையும் இணைத்துக்கொண்டுள்ளார்.


தமிழ் திரையுலகில் முன்னணி மாஸ் நடிகராக வலம் வருபவர் விஜய். தற்போது ரூ.100 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கி உச்சபட்ச நடிகராக திகழ்ந்து வரும் இவரின் கால்ஷீட்டுக்காக தயாரிப்பாளர்கள் வரிசையில் காத்துக்கொண்டிருக்க, அதெல்லாம் வேண்டாம் என உதறித் தள்ளிவிட்டு, மக்களுக்கு சேவை செய்வதற்காக அரசியலில் குதிக்க முடிவெடுத்துள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை கடந்த மாதம் வெளியிட்டார் விஜய்.

அதோடு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து வரும் கோட் படத்தை தொடர்ந்து தான் நடிக்க கமிட் ஆகியுள்ள தளபதி 69 படத்தோடு தான் சினிமாவை விட்டு விலகுவதாகவும் அறிவித்து இருக்கிறார் விஜய். அவரின் இந்த முடிவு அவரது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தாலும், மறுபுறம் விஜய்யின் அரசியல் பயணத்தைக் காண ஆவலோடு இருக்கின்றனர். அதன்படி நடிகர் விஜய் தன்னுடைய அரசியல் கட்சிக்கு தமிழக வெற்றிக் கழகம் என பெயரிட்டு உள்ளார்.

Tap to resize

Latest Videos

இதையும் படியுங்கள்... பிரச்சார மேடையாக மாறிய Flight... விமானத்தில் வாக்கு சேகரிப்பு - அலப்பறை கிளப்பும் த.வெ.க கட்சியினர்

இக்கட்சியின் உறுப்பினர் சேர்க்கையானது, மகா சிவராத்திரி தினமான இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டு உள்ளது. தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை முழுக்க முழுக்க ஆன்லைன் செயலி மூலம் மட்டுமே நடத்தப்பட உள்ளது. இதற்காக பிரத்யேக செயலி வடிவமைக்கப்பட்டு, அதில் தற்போது உறுப்பினர் சேர்க்கையும் நடைபெற்று வருகிறது.

உறுப்பினர் சேர்க்கைக்கான செயலியை அறிமுகம் செய்து வைத்துள்ள விஜய், அதில் முதல் உறுப்பினராக தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். இதுகுறித்து வீடியோ வெளியிட்டுள்ள அவர், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்கிற அடிப்படை சமத்துவ கொள்கையை பின்பற்றி வருகின்ற சட்டமன்ற தேர்தலில் என்னோட பயணத்தில் இணைந்து மக்கள் பணி செய்ய வாருங்கள். நாங்கள் ஏற்கனவே வெளியிட்ட எங்கள் கட்சியின் உறுதிமொழியை படியுங்கள். உங்கள் எல்லாருக்கும் பிடித்திருந்தால், உடனே ஜாயின் பண்ணுங்க. ப்ளீஸ். ஈஸியாக உபயோகிக்கும் வகையில் தான் இந்த செயலி உள்ளது என விஜய் அந்த வீடியோவில் பேசி உள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினர்களாக இணைய:

1) WhatsApp users - https://t.co/iw2ulVFXhG

2) TelegramApp users - https://t.co/YgMBgSnPWh

3) WebApp users - https://t.co/fqlptErSI5

4) Send WhatsApp message as 'TVK' to 09444-00-5555 pic.twitter.com/IPgiwx8mMB

— TVK Vijay (@tvkvijayhq)

இதையும் படியுங்கள்... மருத்துவமனையில் அஜித்... சீக்கிரம் குணமடைய வேண்டி அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் பிரார்த்தனை

click me!