பிரச்சார மேடையாக மாறிய Flight... விமானத்தில் வாக்கு சேகரிப்பு - அலப்பறை கிளப்பும் த.வெ.க கட்சியினர்

By Ganesh A  |  First Published Mar 8, 2024, 5:12 PM IST

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த நிர்வாகி ஒருவர் விமானத்தில் பயணம் செய்த பயணிகளிடம் வாக்குசேகரித்த வீடியோ வைரலாகி வருகிறது.


நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற பெயரில் அரசியல் கட்சி ஒன்றை ஆரம்பித்துள்ளார். கட்சி குறித்த அறிவிப்பை கடந்த மாதம் அதிகாரப்பூர்வமாக அறிவித்த விஜய், அதோடு வருகிற நாடாளுமன்ற தேர்தலில் தனது கட்சி போட்டியிடாது என்பதையும் திட்டவட்டமாக அறிவித்தார். மேலும் வருகிற 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு ஆட்சியை பிடிக்கும் முனைப்போடு விஜய் அரசியல் கட்சியை தொடங்கி இருக்கிறார். 

நடிகர் விஜய்யின் அரசியல் வருகையால் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. அதுமட்டுமின்றி உறுப்பினர் சேர்க்கையை மற்ற கட்சிகளைப் போல் இல்லாமல் புதுவிதமாக செயலி மூலம் நடத்தி வருகிறது தமிழக வெற்றிக் கழகம். அந்த செயலி மூலம் 2 கோடி உறுப்பினர்களை கட்சியில் சேர்ப்பதை இலக்காக கொண்டு செயல்பட்டு வருகின்றனர் அக்கட்சி நிர்வாகிகள்.

Tap to resize

Latest Videos

இதையும் படியுங்கள்... பூட்டான் தபால் நிலையத்தில்.. மாளவிகா மோகனன் தங்கலான் கெட்டப்பில் இருக்கும் ஸ்டாம்ப்! வைரலாகும் புகைப்படம்!

உறுப்பினர் சேர்க்கைக்கான செயலி இன்று தான் அறிமுகம் செய்யப்பட்டது. அதில் தற்போது உறுப்பினர் சேர்க்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனிடையே விஜய் ரசிகர் ஒருவர் விமானத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட வீடியோ காட்சி ஒன்று வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

தேனி மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் மாவட்ட தலைவராக இருப்பவர் தான் பாண்டி. அவர் விமானத்தில் கொடியுடன் வந்து வருகிற 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்கு வாக்களிக்குமாறும், தமிழகத்திற்கு மாற்றம் தேவை, அதை தளபதியால் தான் கொடுக்க முடியும் எனக்கூறியும் வாக்கு சேகரித்துள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

இதையும் படியுங்கள்...சீரியஸ் கண்டிஷனில் தீபாவின் தந்தை; மாமனாரின் ஆசையை நிறைவேற்றுவாரா கார்த்திக்? கார்த்திகை தீபம் சீரியல் அப்டேட்

click me!