அப்போலோ மருத்துவமனையில் டாக்டர் பெரியகருப்பன் தலைமையிலான மருத்துவர்கள் குழு நடிகர் அஜித்திற்கு அறுவை சிகிச்சை செய்து மூளையில் இருந்த கட்டியை அகற்றி இருக்கிறது எனத் தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் அஜித் குமாருக்கு சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் வைத்து மூளை அறுவை சிகிச்சை செய்யப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், அஜித் ரசிகர்கள் பலர் அவரது உடல்நிலை குறித்து அக்கறையுடன் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
கோலிவுட்டில் மாஸ் ஹீரோவாக வலம் வருபவர்களில் ஒருவர் அஜித் குமார். இவர் தற்போது மகிழ் திருமேனி இயக்ககும் ‘விடாமுயற்சி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்துக்குப் பின் அவர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் எனவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
படங்களில் நடிப்பதற்குப் மத்தியில் வெளிநாடுப் பயணங்கள், பைக் பயணங்கள் என பிசியாக இருப்பவர் நடிகர் அஜித். உடல்நலனிலும் மிகுந்த அக்கறை எடுத்துக்கொள்ளும் அவர் அவ்வப்போது மருத்துவ பரிசோதனை செய்துகொள்வதும் வழக்கம். அந்த வகையில் புதன்கிழமை அவர் அப்போலோ மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனை செய்யச் சென்றார்.
மகளிர் தலைமையில் த.வெ.க. உறுப்பினர் சேர்க்கை அணி! நிர்வாகிகளை அறிவித்த தலைவர் விஜய்!
மருத்துவப் பரிசோதனையில் நடிகர் அஜித்தின் மூளையில் லேசான வீக்கம் இருந்தது தெரியவந்திருக்கிறது. மூளையில் காணப்படும் இந்த வீக்கம் பயப்படக்கூடிய அளவிற்கு இல்லை என்று மருத்துவமனை தரப்பில் கூறப்பட்டுள்ளது. இருந்தாலும் ஒரு சிறிய அறுவைசிகிச்சை செய்துகொள்வது நல்லது எனவும் மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.
அதன்படி அப்போலோ மருத்துவமனையில் டாக்டர் பெரியகருப்பன் தலைமையிலான மருத்துவர்கள் குழு நடிகர் அஜித்திற்கு அறுவை சிகிச்சை செய்து மூளையில் இருந்த கட்டியை அகற்றி இருக்கிறது எனத் தகவல் வெளியாகியுள்ளது.
சமூக ஊடங்களில் விடாமுயற்சி அப்டேட் கேட்டுக்கொண்டிருந்த அஜித் ரசிகர்கள் இந்தத் தகவலால் கலக்கம் அடைந்துள்ளனர். தல அஜித் சீக்கிரம் குணமடைந்து இயல்பு நிலைக்குத் திரும்ப வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.
சத்தியமங்கலம் அருகே சாதி ஆணவப் படுகொலை: காதல் திருமணத்தை எதிர்த்து வெறிச்செயல்!