
தளபதி விஜய்யின் 'மாஸ்டர்' பட அப்டேட் தான், தற்போது இணையதளத்தில், பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ரசிகர்களும் விஜய் என்ன பேசுவார் என்பதை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.
விஜய் வருவதற்கு முன்பாக, அவருடைய பெற்றோர்களை மேடைக்கு அழைத்த, தொகுப்பாளர் பாவனா, ஒரு சில சுவாரஸ்யமான கேள்விகளை அவர்களிடம் கேட்டார்.
குறிப்பாக விஜய் எத்தனையோ பாடல்கள் பாடியுள்ளார். அதில், உங்களுக்கு மிகவும் பிடித்தது எது என கேட்ட, 'மாஸ்டர்' படத்தில், பாடியுள்ள குட்டி ஸ்டோரி பாடல் மிகவும் பிடித்திருப்பதாகவும். இந்த பாடலை ஆங்கில வரிகளில் மிகவும் ஸ்டைலிஷாக அவர் பாடியுள்ளார் என தெரிவித்தார்.
மேலும் இதற்கு முன்பாக, விஜய் காதலுக்கு மரியாதை படத்தில் பாடிய, ஓ பேபி... பேபி பாடல் மிகவும் பிடித்த பாடல் என்றும் தெரிவித்தார்.
பின்னர் தொகுப்பாளர், நீங்கள் ஒரு அம்மாவாக விஜயிடம் இப்போது கேட்க நினைப்பது என்ன என்று கேட்க, விஜய் தன்னை கட்டி பிடிக்க வேண்டும் என கூற, விஜய்... கீழே இருந்து மேல வந்து தன்னுடைய அம்மாவை கட்டி பிடித்து ஆசையை நிறைவியேற்றினார். அந்த தருணம் அனைவர் மனதையும் உருக்கும் விதமாக இருந்தது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.