அப்பாவிடம் பார்த்த அதே விஷயத்தை தளபதியிடம் பார்த்தேன்! தயாரிப்பாளர் சினேகா பிரிட்டோவின் நெகிழ்ச்சி பேச்சு!

By manimegalai aFirst Published Mar 15, 2020, 7:14 PM IST
Highlights

தளபதி விஜய் நடிப்பில் உருவாகி உள்ள 'மாஸ்டர்' திரைப்படம் அடுத்த மாதம், வெளியாக உள்ள நிலையில், தற்போது மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா, மிக பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது.
 

தளபதி விஜய் நடிப்பில் உருவாகி உள்ள 'மாஸ்டர்' திரைப்படம் அடுத்த மாதம், வெளியாக உள்ள நிலையில், தற்போது மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா, மிக பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது.

இதுவரை இல்லாத அளவிற்கு, மிகவும் பாதுகாப்புடன் இசை வெளியீட்டு விழா நடைபெற்று வருகிறது. காரணம் பிகில், மற்றும் சர்க்கார் பட இசை வெளியீட்டு விழாவில், ரசிகர்கள் கூட்டம் கூடியதால் சில பல பிரச்சனைகள் ஏற்பட்டது. கூட்டத்தை கட்டு படுத்துவதற்காக போலீசார் ரசிகர்கள் மீது லேசான தடியடி தடத்தியதால் சிறு சலசலப்பும் ஏற்பட்டது.

சன்டிவி தொலைக்காட்சியில், சரியாக 6 : 30 மணிக்கு சன் டிவியில், ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சியில், மாஸ்டர் லிடியன் நாதஸ்வரம், விஜய்யின் பாடல்களை இசைத்து துவங்கி வைத்தார். 

பின்னர் இந்த படத்தின், தயாரிப்பாளர் சினேகா பிரிட்டோ... மேடைக்கு வந்து பேசினார். அப்போது சிறு வயதில் இருந்தே, நான் தளபதியின் ரசிகர் என்றும். இந்த படத்தில் விஜய் ஒரு, பேராசிரியராக நடித்தார். தன்னுடைய அப்பாவும் ஒரு பேராசிரியராக இருந்து மிகவும் கஷ்டப்பட்டு உயர்ந்தவர் அவரிடம் இருந்த அதே உழைப்பை தான் தளபதியிடம் பார்த்தேன் என கூறியுள்ளார்.

பின்னர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், தன்னுடைய துணை இயக்குனர்களை மிகவும் சுதந்திரமாக விட்டு வேலை வாங்கினார். அதே போல், அனிருத்தின் இசைக்கு கொலை வெறி காலத்தில் இருந்தே, மிகப்பெரிய ஃபேன் என தெரிவித்தார்.

மேலும் இந்த படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றி தெரிவித்த சினேகா, ஆண்ட்ரியா மிகவும் திறமையான நடிகை என்றும், மாளவிகா மோகன், அழகான நடிகை என புகழ்ந்தார். இறுதியில் தன்னுடைய பெற்றோர், சங்கீதா விஜய், சந்திரசேகர், ஷோபா சந்திர சேகர் என அனைவருக்கும் தன்னுடைய நன்றிகளை தெரிவித்து மிகவும் சிம்பிளாக தன்னுடைய பேச்சை முடித்தார்.

click me!