தல ரசிகர்களின் எதிர்பார்ப்பை பொய்யாக்கிய தளபதியின் மெர்சல்... முதல் நாளிலேயே தெறிக்கவிட்ட விஜய் ஃபேன்ஸ்...

 
Published : Oct 20, 2017, 12:19 PM ISTUpdated : Sep 19, 2018, 01:19 AM IST
தல ரசிகர்களின் எதிர்பார்ப்பை பொய்யாக்கிய தளபதியின் மெர்சல்...  முதல் நாளிலேயே தெறிக்கவிட்ட விஜய் ஃபேன்ஸ்...

சுருக்கம்

Vijay film mersal beat Ajith vivegam collections

பல பிரச்சினைகளை எதிர்க்கொண்ட விஜயின் ‘மெர்சல்’ அத்தனை தடைகளை தகர்த்தெரிந்து அறிவித்தது போல தீபாவளியன்று வெளியானது. வனவிலங்கு வாரியத்தின் எதிர்ப்பால், எங்கே படம் தீபாவளிக்கு ரிலிஸாகாமல் போய்விடுமோ! என்று விஜய் ரசிகர்கள் அச்சப்பட்ட நிலையில், நேரடியாக களத்தில் இறங்கிய விஜய், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமையை சந்தித்த மறுநாளே, வனவிலங்கு வாரியத்தின் அவசர கூட்டம் நேற்று காலை நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ‘மெர்சல்’ படத்திற்கு தடையில்லா சான்றிதழ் வழங்கியது.
 
அதேபோல, இந்த சான்றிதழை சென்சார் குழுவுக்கு படக்குழு வழங்கியதை தொடர்ந்து, தீபாவளிக்கு முந்தைய நாள் தான் சுமார் 11 மணியளவில் ‘மெர்சல்’ படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதனால், படமும் சொன்னது போல் தீபாவளிக்கு உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியானது. சென்னையில் உள்ள சில திரையரங்குகளில் சென்சாருக்கு முந்தைய நாள் இரவே நான்கு நாட்களுக்கு உண்டான அனைத்து டிக்கெட் தீர்ந்தது.


 
படத்திற்கு ரசிகர்களிடம் கிடைத்துள்ள ஏகோபித்த வரவேற்பால் வசூலி விஜய் தெறிக்க விட, அஜித் ரசிகர்கள் மெர்சலாகி கிடக்கிறார்கள். சில அஜித் ரசிகர்கல் மெர்சல் படம் குறித்து எதிர்மறையான கருத்துக்களை சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். இருந்தாலும், படத்தை பார்க்கும் அனைவரும், சூப்பர்... செம்ம... வேற லெவல் என்று கூறுகின்றனர். அதற்கு ஏற்றவாறு, படம் ரிலீஸான முதல் நாளில், பாகுபலி சாதனையை முறியடித்த அஜித்தின் விவேகம் படத்தின் வசூல் சாதனையை ‘மெர்சல்’ முறியடித்துவிட்டது.
 
விவேகம் படம் ரிலீஸான அன்று சென்னையில் ரூ. 1. 21 கோடி வசூலித்தது. விஜய்யின் மெர்சல் விவேகத்தை முந்தி ரூ. 1.48 கோடி வசூல் செய்துள்ளது. அமெரிக்காவில் ரிலீஸான அன்று மற்றும் ப்ரீமியர் ஷோக்கள் மூலம் மெர்சல் படம் ரூ. 3.08 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்திலும் நல்ல வசூல் செய்துள்ளது.


 
வார நாளில் ரிலீஸாகியும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்தில் மெர்சல் நல்ல வசூல் செய்துள்ளது. ஆஸ்திரேலியாவில் ரூ. 68.01 லட்சமும், இங்கிலாந்தில் ரூ. 81.08 லட்சமும் வசூலித்துள்ளது. மலேசியாவிலும் புதன்கிழமை ரிலீஸான மெர்சல் ரூ. 90.31 லட்சம் வசூல் செய்துள்ளது.  தமிழகத்தில் மட்டும் இன்றி உலக நாடுகள் பலவற்றில் சக்க போடு போட்டுவருகிறது ‘மெர்சல்’ படத்திற்கு கிடைத்த வரவேற்பால் விஜய் மற்றும் அட்லி டீம் செம ஹாப்பியில் இருக்கிறார்களாம்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

போடுறா வெடிய... ஜெயிலர் 2-வில் பாலிவுட் பாட்ஷா நடிப்பது உறுதி - அடிதூள் அப்டேட் சொன்ன பிரபலம்
அரசனாக மோகன்லால் நடித்த விருஷபா... அடிபொலியாக இருந்ததா? விமர்சனம் இதோ