பிரியதர்ஷினியின் “சக்தி” படத்தில் பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரவ்?

 
Published : Oct 20, 2017, 10:02 AM ISTUpdated : Sep 19, 2018, 01:19 AM IST
பிரியதர்ஷினியின் “சக்தி” படத்தில் பிக் பாஸ் டைட்டில் வின்னர் ஆரவ்?

சுருக்கம்

Big Pass title winner aarav in Priyadarshini Sakthi film

நடிகர் சரத்குமாரின் மகள் வரலக்ஷ்மி வைத்து இளம் பெண் இயக்குநர் இயக்கும் படம் சக்தி.

இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கில் கம்பீரமாக இருக்கும் வரலட்சுமியின் போஸ்டரை வெளியிட்டு அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தவர் பிரியதர்ஷினி.

தனக்கென்று ஒரு தனி பாணியை வைத்துக்கொண்டு பல வெற்றிப் படங்களை இயக்கும் கலக்கல் மன்னன் மிஸ்கினின் உதவி இயக்குனர்தான் இந்த பிரியதர்ஷினி.

திரையுலகமே ஆச்சரியத்துடன் பார்க்கும் அளவிற்கு தனது முதல் போஸ்டரில் தான் யார்? தனது திறமை என்ன? என்பதை அறிய செய்தவர்.

பிரியதர்ஷினியின் வெளியிட்ட ஃபர்ஸ்ட் லுக்கை பார்த்த கலைப்புலி எஸ்.தாணு, சரத்குமார் என பல்வேறு திரைப் பிரபலங்கள் என நிறைய பேர் அவரை வெகுவாக பாராட்டியுள்ளனர்.

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் கம்பீர லுக்கில் இருக்கும் வரலக்ஷ்மி, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மூலம் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்த பிரியதர்ஷினி என இருவராலும் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

அதன்பின்னர், இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மேக்கிங் வீடியோவும் வெளியாகி அதுவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில், தற்போது இந்தப் படத்தில் முக்கியமான கதபாத்திரத்தில் பிக் பாஸின் டைட்டில் வின்னர் ஆரவ் நடிக்கப் போகிறார் என்ற தகவல் சினிமா வட்டாரங்களீல் இருந்து கசிந்துள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதுவரை மாடலாகவும் சரி, ஓகே கண்மனி படத்திலும் சரி ஆரவ் நடித்திருந்தாலும் பிக் பாஸால் தான் அனைவரும் பேசுமளவிற்கு பிரபலமாகியுள்ளார்.

பிக்பாஸ் டைட்டிலை வென்றபிறகு சமீபத்தில் மணிரத்னம் கூட இவரை வீட்டிற்கு அழைத்துப் பேசியுள்ளார்.

இந்த நிலையில், பிக் பாஸுக்கு பிறகு ஆரவ், பிர்யதர்ஷினியின் “சக்தி” படத்தில் ஒப்பந்தமானால் இது அவருக்கு பெரிய அளவில் பேசப்படும் படமாக அமையும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

பிரியதர்ஷின் இயக்கத்தில் வரலட்சுமி நடிக்கும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் வெளியாக இருக்கிறது என்பது கொசுறு தகவல்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அனல் பறக்கும் அரசியல் வரிகள்; ஜன நாயகன் 2-வது சிங்கிள் ‘ஒரு பேரே வரலாறு’ ரிலீஸ் - ரசிகர்கள் உற்சாகம்!
நீயெல்லாம் கடவுளா? உனக்கு எதுக்கு பூஜை? விவாகரத்து வதந்திக்கு மத்தியில் வாழ்வின் வலிகளைப் பகிர்ந்த செல்வராகவன்!