விசாரணைக்கு ஆஜராகாத விஜய்யின் தந்தை - தாய்..!! நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!

By manimegalai aFirst Published Sep 19, 2021, 5:15 PM IST
Highlights

கோலிவுட் திரையுலகின் வசூல் நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கும் தளபதி விஜய், தன்னுடைய தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா உள்ளிட்ட 11 பேருக்கு எதிராக தொடர்ந்த வழக்கில், அவர்களுக்கு தரப்பில் இருந்து வழக்கறிஞர் ஆஜராகாததால் விசாரணையை வரும் 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடிகர் விஜய் அரசியலில் காலடி எடுத்து வைப்பாரா? என்கிற எதிர்பாப்பு கடந்த சில வருடங்களாகவே அவரது ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே உள்ளது. தன்னுடைய அரசியல் ஆசையை வெளிப்படுத்தும் விதமாக இவர் நடிக்கும் படங்களில் ஆடியோ லாஞ்சுகளில் இவர் பக்கம் பக்கமாக பேசிய வசனங்களே இதற்க்கு சாட்சி என கூறலாம். இந்நிலையில் திடீர் என, கடந்த வருடன் விஜய்யின் தந்தை அரசியல் கட்சி ஒன்றை துவங்கி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்த அரசியல் கட்சி குறித்து அறிக்கை வெளியிட்ட தளபதி விஜய், இந்த கட்சிக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும், தனது பெயரை பயன்படுத்தி கூட்டங்களை நடத்தவோ, வேறு செயல்களில் ஈடுபடவோ தந்தை, தாய் மற்றும் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு தடை விதிக்கக் கோரி, கடந்த ஏப்ரலில் நடிகர் விஜய் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் எதிர் மனுதாரர்களான எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா, முத்து ஆகியோர் தரப்பில் பதில் மனுதாக்கல் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், நடிகர் விஜய் தரப்பில் வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகவில்லை.

அதனால் பதில் மனுக்களை திருப்பி அளித்த நீதிபதி, விசாரணையை செப்டம்பர் 27ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது, செப்டம்பர் 27 ஆம் தேதி அன்று பதில் மனுவை தாக்கல் செய்யவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

click me!