“விலையில்லா விளம்பரம் செஞ்ச தெய்வங்களே...” ஹெச். ராஜா, தமிழிசைக்கு விஜய் ரசிகர்கள் நன்றி!

 
Published : Jan 25, 2018, 07:30 PM ISTUpdated : Sep 19, 2018, 01:52 AM IST
“விலையில்லா விளம்பரம் செஞ்ச தெய்வங்களே...” ஹெச். ராஜா, தமிழிசைக்கு விஜய் ரசிகர்கள் நன்றி!

சுருக்கம்

vijay fans thanks to tamilisai and H.raja for mersal success

விஜய் மூன்று வேடங்களில் நடித்த “மெர்சல்” படத்தின் 100 வது நாளான் இன்று விஜய் ரசிகர்கள் டுவிட்டரை தெறிக்கவிட்டு கொண்டாடி வருகின்றனர். அதேநேரத்தில் விலையில்லா விளம்பரம் செஞ்ச தெய்வமே... என ஹெச் ராஜாவுக்கு நன்றி தெரிவித்து கலாய்க்கத்துள்ளனர்.

விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் ‘மெர்சல்’ படம் கடந்த  தீபாவளிக்கு வெளியானது. விஜய் மூன்று வேடங்களில் நடித்துள்ள ‘மெர்சல்’ படத்தை அட்லீ இயக்கியுள்ளார். சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் ஆகிய மூவரும் ஹீரோயின்களாக நடித்துள்ளார். எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடித்துள்ளார். ‘மெர்சல்’ படத்தில் மத்திய அரசின் திட்டங்களான ஜிஎஸ்டி மற்றும் டிஜிட்டல் இந்தியா குறித்து எதிர்மறையான வசனங்கள் இடம்பெற்றுள்ளன.

‘இந்த வசனங்களை நீக்க வேண்டும். இல்லாவிட்டால், படத்தின் மீது வழக்கு தொடர்வோம்’ என பாஜகவின் தமிழகத் தலைவரான தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தார். இதே போல தனியார் தொலைகாட்சியில் நேர்காணலில்  பேசிய பாஜக தேசிய தலைவர் எச் ராஜாவிடம் மெர்சல் படம் பார்த்துவிட்டீர்களா என தொகுப்பாளர் கேள்வி கேட்டதற்கு பார்த்துவிட்டேன், நெட்டில் பார்த்தேன் என அசால்ட்டாக பதிலளிக்கிறார் எச் ராஜா. மெர்சல் படத்திற்கு செலவில்லாமல் பாஜக தலைவர்கள் விலையில்லா விளம்பரங்கள் தேடி தந்துள்ளனர் என அப்போது கலாய்க்கப்பட்டது.

மேலும், பாஜக தலைவர்கள் கொடுத்த அழுத்தத்தால், மெர்சலுக்கு காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, சசிதரூர் உள்ளிட்டோரும் ஆதரவு குரல் கொடுக்க விஷயம் தேசிய அளவில் பேசப்பட்டது. மெர்சல் படம் அரசியல் ரீதியில் சர்ச்சையை ஏற்படுத்தியதால் படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு அதிகரித்தது. இதனால் படத்தில் என்னதான் இருக்கு என பார்க்க மக்களிடையே ஆர்வம் அதிகரித்தது. இதன் வெளிப்பாடாக படம் ரிலீஸான ஒரே வாரத்தில் 170 கோடி ரூபாய் வசூல் செய்தது. இதனையடுத்து பல்வேறு தலைவர்களின் கருத்தை சமாளிக்க முடியாமல் திணறிய ஹெச். ராஜா பாஜகவால் தான் மெர்சல் படம் வெற்றி பெற்றது என்றால் நடிகர் விஜய்யும் அவரது தந்தையும் பாஜகவுக்கு நன்றி கூற வேண்டும் என நைசாக சமாளித்து நழுவினார்.

பாஜகவின் இந்த விளம்பரத்தால் எந்த தமிழ் படமும் இதுவரை செய்யாத வசூல் சாதனையை, விஜய்யின் மெர்சல் படம் செய்தது. இப்படை பலவிமர்சனங்களையும், பலகோடி வசூலையும் வாரிக்குவித்து வசூலில் வெற்றிக்கொடி நாட்டிய இந்தப்படம் இன்றுடம் 100 நாள் ஆகிறது.

இந்த செஞ்சுர் வெற்றியை தளபதி ரசிகர்களை சமூகவலைதளமான டுவிட்டரில் தெறிக்கவிட்டு மெர்சலாக டிரெண்டாக்கி வருகின்றனர்.

இதில், விலையில்ல விளம்பரம் செய்து கொடுத்து எங்கள் தளபதியின் மெர்சல் படத்தை மெகா ஹிட் ஆக்கிய தமிழிசைக்கும், ஹெச்.ராஜாவுக்கும் நன்றிகள் என ட்விட்டரில் அதகளம் செய்து வருகின்றனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

யார் இந்த அதிரே அபி? மெகா ஸ்டார் பிரபாஸுடன் இவருக்கு இவ்வளவு நெருக்கமா? வைரலாகும் பின்னணி!
15 வருடங்களாக நாகார்ஜுனாவை வாட்டும் நோய்! ஏன் இன்னும் குணமாகவில்லை? கவலையில் ரசிகர்கள்!