
பாலிவுட், ஹாலிவுட் என பிசியாக நடித்துக்கொண்டிருப்பவர் நடிகை பிரியங்கா சோப்ரா... இவர் சுமார் 4 ஆண்டுகளாக வரி செலுத்தாமல் சொகுசு கார் மற்றும் விலை உயர்ந்த வாட்ச் ஆகியவற்றை வாங்கி அனுபவித்து வந்துள்ளார். இவருக்கான வரியை உடனடியாக செலுத்தும் படி வருமான வரித்துறை தற்போது உத்தரவு பிறப்பித்துள்ளது.
இவர் கடந்த 2006 ஆண்டு வைத்திருந்த விலை உயர்ந்த பொருட்களான சொகுசு கார் மற்றும் வாட்ச் ஆகிய வற்றுக்கு வரி செலுத்தவில்லை என கூறி பிரியங்கா சோப்ராவிற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இதற்கு பதில் அளித்துள்ள பிரியங்கா சோப்ரா, தற்போது நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ள பொருட்களான 40 லட்சம் மதிப்புள்ள எல்.வி.எம்.எச் டாக் வாட்ச் மற்றும் 27 லட்சம் மதிப்புள்ள டொயோட்டா பிரியூஸ் கார் தனக்கு பரிசாக வந்தது என்றும் அது தன்னுடைய வருமானத்திற்கு கீழ் வராது என்றும் தெரிவித்துள்ளார்.
ஆனால் இவர் கொடுத்துள்ள விளக்கத்தை ஏற்க மறுத்த வருமான வரித்துறை, 2006 - 2007 ஆம் நிதியாண்டு முதல் 2011 ஜனவரி வரை வருமான வரித்துறை சட்ட திட்டத்தின் கீழ் வரி செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
மேலும் பிரியங்கா சோப்ரா நடத்தி வரும் தயாரிப்பு நிறுவனமான ரெட் சில்லிஸ் என்டர்டைடேய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் அவருக்கு பரிசாக கொடுக்கப்பட்ட சுமார் 17 லட்சம் மதிப்புள்ள நகைக்கும் வரி செலுத்துமாறு கிடுக்கு புடி போட்டுள்ளது வருமான வரித்துறை.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.