#அப்டேட்_குடுங்க_லோகி... வெயிட்டிங்கிலேயே வெறியேறும் தளபதி ரசிகர்கள்...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Nov 11, 2020, 08:48 PM IST
#அப்டேட்_குடுங்க_லோகி... வெயிட்டிங்கிலேயே வெறியேறும் தளபதி ரசிகர்கள்...!

சுருக்கம்

கடந்த 7 மாதத்திற்கு பிறகு தியேட்டர்கள் திறக்கப்பட்டுள்ளதால் தீபாவளிக்கு கண்டிப்பாக மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ் செய்யப்படும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

லோகேஷ் கனகராஜ் - விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள “மாஸ்டர்” திரைப்படம் கடந்த ஏப்ரல் மாதம் 9ம் தேதியே ரிலீஸ் செய்யப்பட்டிருக்க வேண்டியது. ஆனால் மார்ச் மாதமே இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் படை எடுத்த, கொரோனா தொற்று காரணமாக மாஸ்டர் படம் ரிலீஸ் ஆகாமல் போனது. அதே நேரம், மாஸ்டர் படம் ரிலீசாகும் என காத்திருந்த ரசிகர்களின் கனவும் தற்போது வரை நிறைவேறாமல் உள்ளது.

 

இதையும் படிங்க: அடி ஆத்தி ‘சூப்பர் சிங்கர்’ ராஜலட்சுமியா இது?.... மெல்லிய புடவையில் மெருகேறி ஜொலிக்கும் லேட்டஸ்ட் போட்டோ ஷூட்...!

இந்த படத்தில் முதன் முறையாக தளபதி விஜய்க்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்துள்ளார்.அதுமட்டுமின்றி மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா உட்பட ஏராளமான நட்சத்திர பட்டாளங்கள் இந்த படத்தில் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அணைத்து ரசிகர்கள் மத்தியிலும் தாறுமாறாக எகிறியுள்ளது. 

 

இதையும் படிங்க: நயன்தாரா டூ ஐஸ்வர்யா ராஜேஷ் வரை தமிழ் ஹீரோயின்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?... பட்டியல் இதோ...!

கடந்த 7 மாதத்திற்கு பிறகு தியேட்டர்கள் திறக்கப்பட்டுள்ளதால் தீபாவளிக்கு கண்டிப்பாக மாஸ்டர் திரைப்படம் ரிலீஸ் செய்யப்படும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தனர். ஆனால் அதிலும் மண்ணைப் போட்ட தயாரிப்பாளர் தரப்பு, மாஸ்டர் படம் தீபாவளிக்கு வெளியாகாது என திட்டவட்டமாக கூறிவிட்டனர். இந்நிலையில் தீபாவளிக்கு டீசர் அல்லது டிரெய்லரையாவது கண்ணில் காட்டுங்கள் என விஜய் ரசிகர்கள் பட்டாளம் மன்றாடி வந்தது. இதனால் #அப்டேட்_குடுங்க_லோகி என்ற ஹேஷ்டேக்கை ட்விட்டரில் தளபதி ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். பலரும் மாஸ்டர் பட அப்டேட் கேட்டு இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு விதவிதமாக ட்வீட் செய்து வருகின்றனர். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

கிரிஷை ஏன்டி கடத்த சொன்ன... விஜயாவை பொழந்துகட்டிய அண்ணாமலை - சிறகடிக்க ஆசை சீரியலில் செம சம்பவம்
நாக சைதன்யாவை பற்றி அப்போது தெரியாது: அமலா உருக்கம்!