என்னுடைய அப்பாவை நினைத்து அழுதுவிட்டேன்.. தல நடிப்பு வேற லெவல் ! இப்படிக்கு என்றென்றும் தளபதி ரசிகை

Published : Jan 13, 2019, 06:27 PM ISTUpdated : Jan 13, 2019, 06:29 PM IST
என்னுடைய அப்பாவை நினைத்து அழுதுவிட்டேன்.. தல நடிப்பு வேற லெவல் ! இப்படிக்கு என்றென்றும் தளபதி ரசிகை

சுருக்கம்

சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா, ஜெகபதி பாபு, தம்பி ராமையா, ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'விஸ்வாசம்', படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் ரசிக்க வைக்கும் அளவிற்கு ரிசல்ட் வந்துள்ளது. படத்தைப் பற்றி விஜய் ரசிகை ஒருவர் தன்னுடைய முக நூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அஜித்குமார் நடித்த படங்களிலேயே 'விஸ்வாசம்' மிகப்பெரிய வெற்றிப்படமாக இருக்கும் என்றும் படக்குழுவினரிடம் தெரிவித்துள்ளனர்.  இப்படத்துக்கு அஜித் ரசிகர்கள் ஆதரவு மட்டுமன்றி, விஜய் ரசிகர்களும் குடும்பமாக பலரும் அதிகாலை  காட்சிக்கே வருகின்றனர். அது தான் இந்த படத்தின் முழு வெற்றியாக்கப்பட்டிருக்கிறது.

பேமிலி ஆடியன்ஸ் கூட்டத்தால் அஜித் படங்களில், 'விஸ்வாசம்'  புதிய சாதனையை எட்டும் என்று விநியோகஸ்தர்கள் கணித்துள்ளனர். தமிழக அரசும் பொங்கலுக்கு 6 நாட்கள் லீவு விட்டதால் வசூலை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

இந்நிலையில் படத்தைப்பற்றி விஜய் ரசிகை ஒருவர் தனது முகநூல் பக்கத்தில் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், கண்ணானக் கண்ணே பாடல்ல வரும் அஜித் பகுதி, ஃபேமிலி ஆடியன்ஸ் குறிவச்சே எடுக்கப்பட்டிருக்கு.. வெறுமனே ரசிகர்களுக்கு ஒரு மாஸ் படம் என்றில்லாமல் ஜனரஞ்சகமான படம். சண்டையில கூட சென்டிமென்ட்டை சேர்த்து அழ விட்டுருக்காங்க, ஆமாம் மனுஷன் செண்டிமெண்ட்ல பிரிச்சி மேஞ்சிட்டாரு.

படம் கடைசி 10 நிமிடங்கள் கல்நெஞ்சம் கொண்டவர்கள் கண்களிலும் கண்ணீர் Automatic கா வரவழைத்து விடுக்கிறார் தல அஜித்.  இது பெர்பெக்ட்  பேமிலி  பேக்கேஜ். அனைவருக்கும் சிறப்பான பொங்கல் விருந்து. ஆக்ஷன், காமெடி, சென்டிமென்ட், மாஸ் காம்போ என ரொம்ப நாளைக்கு அப்புறம் தரமான சம்பவம், அஜித் நடித்த படங்களில் இது பெஸ்ட்!   தல நடிப்பு வேற லெவல் !  "நம்மளோட கடந்த காலத்தையும் நிகழ் காலத்தையும் குழந்தைங்கவமேல திணிக்காதிங்க! அவங்க எதிர்காலம் நல்லா இருக்கும் அவங்கள சந்தோமா விடுங்க" END கருத்து செம்ம!"

பெண் குழந்தை தந்தைக்கு இன்னொரு தாய், தானாவே கண்ணீர் வந்துருச்சி!  கடைசி சீனில் என்னுடைய அப்பாவை நினைத்து அழுதுவிட்டேன் இப்படிக்கு என்றென்றும் தளபதி ரசிகை என பதிவிட்டுள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

தமிழ் பிக்பாஸ் 9ல் சிறந்த டாப் 5 போட்டியாளர்கள் யார் யார் தெரியுமா? டாப்பில் பாருவா?
25 ஆண்டுகளில் முதன்முறையாக படையப்பா படம் பார்த்த ரம்யா கிருஷ்ணன்... இத்தனை வருஷமா ஏன் பார்க்கல தெரியுமா?