
விஜய் 62
விஜய் 62 படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு துவங்கி நடைபெற்று வருகிறது.
இந்த படத்தில் விஜய் யங் லுக்கில் சூப்பராக இருக்கிறார். விஜய்யின் யங் லுக் புகைப்படம் சமீபத்தில் வெளியாகி வைரலானது.மேலும் விஜய் 62 படத்தில், பைரவாவில் விஜய்யுடன் ஜோடி போட்ட கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.
பத்திரிக்கையா! வேண்டாம்
தனது மகன் மற்றும் மகள் பத்திரிக்கைகளில் வருவதையே விரும்பாவதவர் விஜய். சினிமாவில் மட்டும் நடிக்க விட்டு விடுவாரா என்ன? என்று அனைவரும் எதிர்பார்த்தனர்.
மகன் சஞ்சய்
ஆனால் அந்த எதிர்பார்ப்புகளை பொய்யாகும் விதமாக வேட்டைக்காரன் படத்தில் தனது மகன் சஞ்சயை தன்னுடன் நடனமாட வைத்தார். தற்போது படிப்பில் கவனம் செலுத்தும் சஞ்சய், படிப்பு முடிந்ததும்தான் நடிப்பில் கவனம் செலுத்துவாராம்.
மகள் திவ்யா சாஷா
பிறகு விஜய் தனது மகளான திவ்யா சாஷாவையும் தெறி படத்தில் நடிக்க வைத்தார். விஜயின் மகளாக சிறு வயதில் மீனாவின் மகளான நைனிகாவும் , சற்று வயது கூடியதும் அந்த கதாபாத்திரத்தில் வருவபவராக விஜயின் மகள் திவ்யா சாஷாவும் நடித்திருந்தனர்.
அப்பாவை போல் மகள்
தற்போது விஜய்யின் மகள் திவ்யா சாஷா குறித்த ஒரு ருசிகர தகவல் வெளிவந்துள்ளது. திவ்யா சாஷா தற்போது 6ம் வகுப்பு படித்து வருகிறார். அப்பாவை போல் மகள் ஒரு விஷயத்தில் கைதேர்ந்தவராம். அது வேறு ஒன்றுமில்லை. தளபதியை போல அவரது மகளும் நன்றாக பாடுவாராம். இப்போதே பல பாடல்களை பாடி அசத்தி வருகிறாராம். பாட்டி ஷோபா அப்பா விஜய் வரிசையில் திவ்யா சாஷாவும் இணைந்து விட்டார்.கூடிய சீக்கிரம் பாடகி அவதாரம் எடுப்பார் என தெரிகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.