
சூர்யா 'தானா சேர்ந்த கூட்டம்' படத்திற்கு பிறகு சூர்யா 62 படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை செல்வராகவன் இயக்குகிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. இந்த படத்திற்கான பூஜை கடந்த புத்தாண்டு அன்று நடந்தது.
வில்லனாக ஜெகபதி பாபு
இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக (மலர் டீச்சர்) சாய் பல்லவி மற்றும் ரகுல் ப்ரித்சிங் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.குறிப்பாக இப்படத்தில் வில்லனாக நடிக்க பிரபல தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன்பு ஜெகபதி பாபு தமிழில் லிங்கா, பைரவா, கத்திசண்டை போன்ற சில படங்களில் நடித்துள்ளார்.
யுவன் இசை
'தானா சேர்ந்த கூட்டம்' படம் கடந்த பொங்கலன்று வெளியானது. அப்போதிலிருந்தே 'சூர்யா 36' படத்தின் ஷூட்டிங் ஆரம்பித்து விட்டது. யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
தெலுங்கு நடிகர்கள்
சமீபகாலமாக சூர்யாவிற்கு, தெலுங்கிலும் நல்ல ஓபனிங் இருந்து வருவதால் இந்த படத்தில் தெலுங்கு சினிமாவில் பிரபலமாக இருப்பவர்கள் நடிக்கிறார்கள்.
தமிழைப்போலவே தெலுங்கிலும் சாய் பல்லவி, ரகுல் ப்ரித்சிங் போன்றோர் நடிக்கின்றனர். அதுபோன்று தெலுங்கில் முன்னணி ஹீரோக்களோடு மோதும் ஜெகபதி பாபுபை, வில்லனாக ஒப்பந்தம் செய்திருக்கிறார்கள்.
பிப்ரவரி முதல் வாரம்
பிப்ரவரி முதல் வாரத்தில் நடக்கும் படப்பிடிப்பில் சூர்யாவும், ஜெகபதி பாபுவும் மோதிக்கொள்ளும் காட்சிகள் படமாக்கப்படவுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.