
நடிகர் விஜய் பிறந்த வளர்ந்தது எல்லாம் சாலிகிராமத்தில் உள்ள வீட்டில் தான். இவர் முன்னணி நடிகர் என்கிற அந்தஸ்த்தை எட்டிய பிறகு தன்னுடைய வீட்டை இசையமைப்பாளர் விஜய் ஆண்டனிக்கு வாடகை விட்டு விட்டு, அடையாரில் இருந்த சொந்த வீட்டிக்கு குடியேறினார்.
பின் அடையாறு வீட்டில் இருந்து மனைவி மற்றும் பிள்ளைகளோடு நீலாங்கரையில் உள்ள வீட்டிற்கு குடியேறினார். தற்போது அடையாறு வீட்டில் தான் விஜயின் அப்பா அம்மா வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் அந்த வீட்டில் இருந்து பனையூரில் உள்ள வீட்டிற்கு மாறியுள்ளாராம் விஜய். காரணம் தற்போது இவர் வசித்து வந்த நீலாங்கரை வீட்டில் நவீன வசதிகள் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாம். இதன் காரணமாகவே நீலாங்கரையில் இருந்து பனையூருக்கு சென்றுள்ளார் விஜய்.
அஜித்தை காபி அடித்த விஜய்:
விஜய் தற்போது தன்னுடைய வீட்டை ரிமோட் மூலம் இயங்கும் படி நவீன வசதிகளுடன் வடிவமைக்க உள்ளது அஜித்தால் தான் என்று கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு அஜித் திருவான்மியூரில் உள்ள வீட்டை நவீன வசதிகளுடன் வடிவமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் விஜய் அஜித்தை காபி அடித்துவிட்டார் என கூறி அஜித் ரசிகர்கள் கெத்து காட்டி வருகின்றனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.