தனது படங்களில் விஜய் பேசி தெறிக்கவிட்ட ஐகானிக் பஞ்ச் டயலாக்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
நடிகர் விஜய் இன்று தனது 50-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். தீவிரமான ஆக்ஷன் காட்சிகள், இயல்பான நடிப்பு மற்றும் டைமிங் காமெடி ஆகியவை மூலம் லட்சக்கணக்கான ரசிகர்களை கவர்ந்துள்ளார் விஜய். குறிப்பாக தெறிக்கவிடும் பஞ்ச் டயாலாக் மூலம் மாஸ் காட்டி இருப்பார் விஜய்.. தனது படங்களில் விஜய் பேசி தெறிக்கவிட்ட ஐகானிக் பஞ்ச் டயலாக்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
திருமலை
முழுக்க முழுக்க ஆக்ஷன் ஹீரோவாக விஜய் சேஞ்ச் ஓவர் ஆன படம் என்றால் அது திருமலை தான். இந்த படத்தில் பல மாஸ் வசனங்கள் இருந்தாலும். “ வாழ்க்கை ஒரு வட்டம் டா.. இதுல ஜெயிக்குறவன் தோப்பான்.. தோக்குறவன் ஜெயிப்பான்” என்ற பஞ்ச் டயலாக் மிகவும் பிரபலானது.
கில்லி
பாக்ஸ் ஆபீஸ் வசூலில் மாஸ் காட்டிய விஜய் படங்களில் கில்லி முக்கியமான படம். இந்த படத்தில் விஜய் பேசும் “ கபடி ஆடலாம், கிரிக்கெட் ஆடலாம், பரதநாட்டியம் ஆடலாம், கதகள் கூட ஆடலாம்.. ஆனா ஆணவத்துல மட்டும் ஆடக்கூடாது மச்சி..” இந்த மாஸ் பஞ்ச் டயலாக் இன்று வரை பலரின் ஃபேவரைட் டயலாக் ஆக உள்ளது.
அதே போல் கில்லி படத்தில் “ இந்த ஏரியா, அந்த ஏரியா, இந்த இடம் அந்த இடம்.. எங்கயுமே எனக்கு பயம் கிடையாது டா.. ஏனா எல்லா ஏரியாலவும் ஐயா கில்லி டா..என்ற பஞ்ச் டயலாக் வெகு பிரபலம்
போக்கிரி
விஜய்யின் மாஸ் படங்களில் போக்கிரி படத்திற்கு தனி இடம் உண்டு. இந்த படத்தில் இடம்பெற்ற “ ஒருவாட்டி முடிவு பண்ணிட்டேனா நானே என் பேச்சை கேட்கமாட்டேன்” என்று பஞ்ச் டயலாக் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது.
குருவி :
விஜய்யின் பக்கா கமர்ஷியல் படமான இந்த படத்தில் “ நம்ம பேச்சு மட்டும் தான் சைலண்டா இருக்கும்.. ஆனால் அடி, சரவெடி..” என்ற பஞ்ச் டயலாக் இடம்பெற்றிருக்கும்.
துப்பாக்கி :
இந்த படத்தில் வில்லனிடம் விஜய் பேசும் ‘ ஐ அம் வெயிட்டிங்’ என்ற டயலாக் மிகவும் பிரபலமானது. கத்தி, தெறி, மெர்சல், வாரிசு படங்களிலும் இதே டயலாக் பயன்படுத்தப்பட்டது.
கத்தி :
10 நிமிஷத்துல மொத்த பேரும் வண்டில இருக்கும்.. வண்டி ஏரியாக்கு வெளில இருக்கணும் என்ற பஞ்ச் டயலாக் மிகவும் பிரபலம்.
மாஸ்டர் :
“என்ன புடிச்சவன் கோடி பேர் இருக்கான் டா வெளில” என்ற ஐகானிக் டயலாக்கை தனது ரசிகர்களுக்காக பேசியிருப்பார் விஜய்.