
விஜய்யின் படங்களுக்கு கேரளாவில் எப்போதுமே மவுசு அதிகம். அதனால் தான் கேரளா தளபதியின் கோட்டை என்று அழைக்கப்படுகிறது. அட்லீ - விஜய் கூட்டணியில் தீபாவளி ட்ரீட்டாக வெளிவந்த "பிகில்" திரைப்படம், கேரளாவிலும் பிரம்மாண்டமாக திரையிடப்பட்டது. ரிலீஸின் போது அந்த திரைப்படத்தில் வரும் ராயப்பன் விஜய்க்கு சிலை வைத்து தெறிக்கவிட்டனர் கேரள ரசிகர்கள்.
தமிழகத்தைப் போல, கேரளாவிலும் வசூல் வேட்டையாடிய பிகில் திரைப்படம், மலையாள சூப்பர் ஸ்டார்களான மம்மூட்டி, மோகன்லால் படங்களின் வசூலை எல்லாம் பின்னுக்குத் தள்ளியுள்ளது. அதிக எதிர்பார்ப்பு மற்றும் பிரம்மாண்ட வரவேற்புடன் கேரளாவில் வெளியிடப்பட்ட 'பிகில்', அங்கு ஒரே நாளில் ரூ.5 கோடி ரூபாய் வரை வசூல் செய்து சாதனை படைத்தது.
இந்நிலையில் 2019ம் ஆண்டில் கேரளாவில் வெளியான படங்களிலேயே அதிக வசூல் செய்த தமிழ் படம் என்ற பெருமையை "பிகில்" திரைப்படம் பெற்றுள்ளது. அதன்படி கேரளாவில் பிகில் திரைப்படம் 19.6 கோடி வரை வசூல் செய்துள்ளது. இந்த தகவலை கேள்விப்பட்ட கேரள ரசிகர்கள் கொண்டாடத்தில் வெறித்தனம் காட்டி வருகின்றனர். தமிழக ரசிகர்கள் கார்த்தியை தலைமேல் வைத்து கொண்டாடிய கைதி படம், கேரளாவில் சுமார் 10 கோடி மட்டுமே வசூல் செய்துள்ளது.
அதற்கடுத்த இடங்களை ரஜினியின் 'பேட்ட', சூர்யாவின் 'காப்பான்', தனுஷின் 'அசுரன்' ஆகிய படங்கள் பிடித்துள்ளதாக கூறப்படுகிறது. அஜித் நடிப்பில் வெளியான 'விஸ்வாசம்' திரைப்படம் 2.4 கோடியும், 'நேர் கொண்ட பார்வை' படம் 2 கோடியும் மட்டுமே வசூல் செய்துள்ளது தல ரசிகர்களை அதிர்ச்சியடைச் செய்துள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.