20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த வாழ்க்கை வேண்டும்... மாஸ்டர் பட இசை வெளியிட்டு விழாவில் பொங்கிய விஜய்!!

By Thiraviaraj RMFirst Published Mar 16, 2020, 9:52 AM IST
Highlights

20 வருடங்களுக்கு முன்பிருந்த வாழ்க்கை தான் தனக்கு வேண்டும் என நடிகா் விஜய் மனவருத்தத்தோடு மாஸ்டர் பட இசை வெளியிட்டு விழாவில் மனம் குமுறியிருக்கிறார் நடிகர் விஜய்.
 

 T.Balamurukan

20 வருடங்களுக்கு முன்பிருந்த வாழ்க்கை தான் தனக்கு வேண்டும் என நடிகா் விஜய் மனவருத்தத்தோடு மாஸ்டர் பட இசை வெளியிட்டு விழாவில் மனம் குமுறியிருக்கிறார் நடிகர் விஜய்.

மாஸ்டர் படத்தின்  இசை வெளியீட்டு விழா சென்னையில் லீலா பேலஸ் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது.

 அப்போது அந்த விழாவில் பேசிய நடிகா் விஜய், என் ரசிகா்களை இந்த விழாவுக்கு பெருவாரியாக அழைக்க முடியவில்லை என்பதில் வருத்தம். 'பிகில்' பட இசை விழாவின் போது சில பிரச்னை ஏற்பட்டது. அதுமட்டுமில்லாமல் தற்போது கொரோனா வைரஸ் பிரச்னை. எனவேதான் எல்லோரையும் அழைக்க முடியவில்லை. விஜய்சேதுபதி சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத ஆளாக உருவாகி நிற்கிறரர். 'ஏன் இந்த படத்துல வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறீங்க... என்று கேட்டேன். 'உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும்' எனச் சொல்லி என்னை அமைதி ஆக்கி விட்டார்.

லோகேஷ் கைகளில் காட்சிகளுக்கு திட்டங்கள் எழுதப்பட்டவையாக இருக்காது. அவரின் உதவியாளா்கள் யாரிடமும் இருக்காது. இதனால் முதல் சில நாள்களில் வெறியாகி மன உளைச்சலுக்கு ஆளாகி விட்டேன். இவரோடு இன்னும் 4 மாதங்கள் வரை என்ன செய்யப் போகிறோம் என்று நினைத்தேன். ஆனால், போகப் போக அவரின் வேலை வேறு மாதிரியாக இருந்தது. நதி மாதிரி வாழ்க்கை. அது ஓடும் போது சில இடங்களில் விளக்கேற்றி வணங்குவார்கள். ஒரு சிலா் பூ போட்டு வணங்குவார்கள். சில போ் கல்லு விட்டு எரிவார்கள். அது போல்தான் நதி போல ஓடிக் கொண்டே இருக்க வேண்டும். நம் எதிரிகளை நம் வெற்றியால் கொல்ல வேண்டும்.

நண்பா் அஜித் போன்று ஒவ்வொரு விழாவுக்கும் எந்த மாதிரி உடைகள் அணியலாம் என பெரிதாக யோசிக்க மாட்டேன். இந்த விழாவுக்கு நம் நண்பா் அஜித் மாதிரி உடை அணிந்து வந்திருக்கிறேன். ஒரு சில நேரங்களில் உண்மையாக இருக்க வேண்டும் என்றால் ஊமையாக இருக்க வேண்டும்.20 வருடங்களுக்கு முன்பிருந்த வாழ்க்கைத்தான் எனக்கு வேண்டும். அந்த வாழ்க்கையில் அவ்வளவு நிம்மதி இருந்தது. ஐ.டி. ரெய்டு இல்லாமல் இருந்தது.என புலம்பி தீர்த்தார் விஜய். ஐடி ரெய்டு விஜயை ரெம்பவே மன அழுத்தத்திற்கு கொண்டு சென்றிருக்கிறது என்பது மட்டும் இந்த விழாவில் தெரிந்தது.

click me!