மாஸ்டர் பட இசை வெளியீட்டு விழாவில் மோதிய நடிகர் விஜய்சேதுபதி, தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ.!!

By Thiraviaraj RMFirst Published Mar 16, 2020, 8:18 AM IST
Highlights

மனிதனைக் காப்பாற்ற மனிதன் தான் வருவான்,மேலே இருந்து யாரும் வரமாட்டார்கள் என்று நடிகர் விஜய் சேதுபதி பேச ,பதிலுக்கு தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ..,'தான் இந்த நிலைக்கு உயரக் காரணமே ஏசு திருச்சபை தான் என்றார். மாஸ்டர் இசை வெளியீட்டு விழா போல் இல்லாமல் ஏசுவா? கடவுளா? மதக்கூட்டம் போல் இருந்தது.இவ்ர்கள் இருவரின் பேச்சுக்களால் அதிர்ந்து போய் இருக்கிறார்  நடிகர் விஜய்.

T.Balamurukan

மனிதனைக் காப்பாற்ற மனிதன் தான் வருவான்,மேலே இருந்து யாரும் வரமாட்டார்கள் என்று நடிகர் விஜய் சேதுபதி பேச ,பதிலுக்கு தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ..,'தான் இந்த நிலைக்கு உயரக் காரணமே ஏசு திருச்சபை தான் என்றார். மாஸ்டர் இசை வெளியீட்டு விழா போல் இல்லாமல் ஏசுவா? கடவுளா? மதக்கூட்டம் போல் இருந்தது.இவ்ர்கள் இருவரின் பேச்சுக்களால் அதிர்ந்து போய் இருக்கிறார்  நடிகர் விஜய்.

விஜய் நடிப்பில் லோகேஷ், கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர். இதில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் நடைபெற்றது.

அந்த விழாவில் பேசிய தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ...,'எந்த நிலைக்கு போனாலும், வந்த நிலையை மறக்காதவர் தளபதி என புகழ்ந்து தள்ளினார். எதைப் பற்றி கேட்டாலும் விஜய்யிடம் இருந்து ஒரு புன்னகை மட்டுமே பதிலாக கிடைக்கும், அந்த அமைதி தான் அவருடைய வெற்றிக்கு காரணம் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், தன் இந்த நிலைக்கு உயர காரணம் ஏசு திருச்சபை தான். அவர்கள் தான் தன்னை இந்த நிலைக்கு கொண்டு வந்தார்கள் என்று கூறினார். ஏற்கனவே நடிகர் விஜய் மீது மதமாற்றம் செய்வதாக வதந்தி பரவி வரும் நிலையில், ஒரு பிரம்மாண்ட விழாவில் அப்படத்தின் தயாரிப்பாளரும், விஜய்யின் நெருங்கிய உறவினருமான சேவியர் பிரிட்டோ இப்படி பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

இதற்கு பதிலடி கொடுத்து  விழாவில் பேசிய நடிகர் விஜய் சேதுபதி.., 

"மனிதனைக் காப்பாற்ற மனிதன்தான் வருவான், மேலே இருந்து யாரும் வரமாட்டார்கள். கொரோனா வைரஸ் குறித்து யாரும் அச்சம் கொள்ள வேண்டாம். இது மாதிரியான தருணத்தில் உறவினர்களே நம்மைத் தொடுவதற்கு யோசிக்கும்போது நம்மைத் தொட்டு சிகிச்சையளிக்கும் மருத்துவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

கடவுளைக் காப்பாற்றுகிறேன் என்று கூறுபவர்களிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்கான மகத்தான மனிதரை கடவுள் இன்னும் படைக்கவில்லை. கடவுளுக்கும் மனிதனுக்கும் நடுவே எந்த மதமும் கிடையாது. தன்னுடைய மதத்தில் கூறியிருப்பதைப் பகிராமல் அனைவரிடமும் மனிதத்தையும், சகோதரத்துவத்தையும் பகிருங்கள். இந்த உலகம் மனிதர்கள் வாழ்வதற்கானது. எனவே, அன்பைப் பகிர்ந்து சகோதரத்துவத்துடன் இருப்போம்" என்றார் காட்டமாக.

click me!