#BREAKING விஜய் மக்கள் இயக்கத்திற்கு புதிய நிர்வாகிகள் நியமனம்... அதிரடி கட்டுப்பாடுகளை விதித்த தளபதி...!

By Kanimozhi PannerselvamFirst Published Nov 11, 2020, 9:39 PM IST
Highlights

அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் தன்னைக் கேட்காமல் விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக பதிவு செய்த நிலையில், தனது விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்த பழைய நிர்வாகிகளை நீக்கிவிட்டு புதிய நிர்வாகிகளை விஜய் அறிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் பெயரில் உள்ள விஜய் மக்கள் இயக்கம் கட்சியாக மாற உள்ளதாக செய்திகள் வெளியானது. ஆனால் விஜய் திட்டவட்டமாக மறுக்க, நான் தான் விஜய் பெயரில் கட்சி ஆரம்பித்தேன், அவருக்கே அது தெரியாது என அவருடைய அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் அதிரடி விளக்கம் ஒன்றை அளித்தார். அதுமட்டுமின்றி மக்கள் சேவையில் சிறப்பாக செயல்பட்டு வரும் விஜய் ரசிகர்களை ஊக்குவிப்பதற்காக தான் கட்சி ஆரம்பித்தேன் என்றும் தெரிவித்தார். 

உடனடியாக சுதாரித்துக்கொண்ட விஜய் அதிரடி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் எஸ்.ஏ.சி. கட்சிக்கும் தனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என திட்டவட்டமாக தெரிவித்த விஜய், தனது ரசிகர்கள் யாரும் அதில் இணைய வேண்டாம் என உத்தரவிட்டார். மேலும் தனது பெயரையோ, புகைப்படத்தையோ எனது அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் பெயரையோ தொடர்புபடுத்தி ஏதேனும் விவகாரகளில் ஈடுபட்டால் அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுப்பேன் என்றும் எச்சரிக்கைவிடுத்திருந்தார். சொந்த அப்பா மீதே நடவடிக்கையா? அப்போ நம்ம கதி என ரசிகர்கள் அப்போதே உஷாராகினர்.

 

இதையும் படிங்க: நயன்தாரா டூ ஐஸ்வர்யா ராஜேஷ் வரை தமிழ் ஹீரோயின்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?... பட்டியல் இதோ...!

அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் தன்னைக் கேட்காமல் விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக பதிவு செய்த நிலையில், தனது விஜய் மக்கள் இயக்கத்தில் இருந்த பழைய நிர்வாகிகளை நீக்கிவிட்டு புதிய நிர்வாகிகளை விஜய் அறிவித்துள்ளார். இதுகுறித்து வெளியாகியுள்ள அறிக்கையில், விஜய் மக்கள் இயக்கத்திற்கு புதிதாக மாவட்டத் தலைவர்கள், இளைஞர் அணி தலைவர்களை சென்னை, காஞ்சிபுரம், கோவை, திருச்சி, மதுரை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், இயக்கத்தின் பெயர், புகைப்படம், கொடி உள்ளிட்ட அனைத்திற்கும் அனுமதி பெற வேண்டும் என்றும் இல்லையெனில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

click me!