Pichaikkaran 2 : யார் அந்த பிகிலி? விஜய் ஆண்டனி சஸ்பென்சாக வச்சிருந்த விஷயம் லீக் ஆனதால் படக்குழு அதிர்ச்சி

By Asianet Tamil cinema  |  First Published Mar 13, 2022, 6:23 PM IST

Pichaikkaran 2 : பிச்சைக்காரன் 2 படத்தில் தான் ஆன்ட்டி பிகிலி என்கிற கதாபாத்திரத்தில் நடிப்பதாக அறிவித்திருந்த விஜய் ஆண்டனி, அப்போ பிகிலி கதாபாத்திரத்தில் நடிப்பது யார் என்கிற கேள்வியை எழுப்பி இருந்தார்.


இசையமைப்பாளர் டூ நடிகர்

தமிழ் திரையுலகில் இசையமைப்பாளர்கள் நடிகர்களாவது ஒரு டிரெண்டாகவே மாறி வருகிறது. அந்த வகையில் குத்து பாடல்களுக்கு பெயர்போன இசையமைப்பாளரான விஜய் ஆண்டனி கடந்த 2012-ம் ஆண்டு வெளியான நான் படம் மூலம் நடிகராக அறிமுகமானார். இப்படம் அமோக வரவேற்பை பெற்றதை அடுத்து சலீம், கொலைகாரன், பிச்சைக்காரன் என அடுத்தடுத்து வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடிக்க ஆரம்பித்தார் விஜய் ஆண்டனி.

Tap to resize

Latest Videos

undefined

திருப்புமுனையாக அமைந்த பிச்சைக்காரன்

அதன்படி கடந்த 2016-ம் ஆண்டு இயக்குனர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்த பிச்சைக்காரன் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க உள்ளதாக கடந்த 2019-ம் ஆண்டு அறிவித்தார் விஜய் ஆண்டனி. இப்படத்தை முதலில் சசி இயக்குவதாக இருந்தது. பின்னர் அவர் வேறுபடங்களில் பிசியானதால் பிரியா கிருஷ்ணமூர்த்தி இயக்கிவதாக அறிவித்தனர்.

இயக்குனர் அவதாரம்

பின்னர் தவிர்க்க முடியாத சில காரணங்களுக்காக அவரும் இப்படத்தில் இருந்து விலகியதால், நடிகர் விஜய் ஆண்டனியே இப்படத்தை கையிலெடுத்தார். அவர் இப்படம் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார். இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், இப்படத்தில் தனது தோற்றத்தையும், அதில் தான் நடிக்கும் கதாபாத்திரத்தின் பெயரையும் வெளியிட்டுள்ளார் விஜய் ஆண்டனி. அதன்படி தான் ஆன்ட்டி பிகிலி என்கிற கதாபாத்திரத்தில் நடிப்பதாக அறிவித்திருந்த விஜய் ஆண்டனி, அப்போ பிகிலி கதாபாத்திரத்தில் நடிப்பது யார் என்கிற கேள்வியை எழுப்பி இருந்தார்.

யார் அந்த பிகிலி?

யார் அந்த பிகிலி என்கிற தகவலை விஜய் ஆண்டனி சஸ்பென்சாக வைத்திருந்த நிலையில், அது யார் என்கிற தகவல் லீக் ஆகி உள்ளது. அதன்படி அந்த பிகிலி கதாபாத்திரத்திலும் விஜய் ஆண்டனி தான் நடிக்க உள்ளாராம். இதன்மூலம் அவரே இப்படத்தில் ஹீரோவாகவும், வில்லனாகவும் நடிக்க உள்ளது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது.

இதையும் படியுங்கள்... பீஸ்ட் ஆடியோ லாஞ்சுக்கு போட்டியாக ‘RRR’ படக்குழு ஏற்பாடு செய்த பிரம்மாண்ட விழா - மாஸ் காட்டப்போவது யார்?

click me!