விஜய்யின் தங்கை மறைவு குறித்து உருக்கமாக பேசிய எஸ்.ஏ.சி - ரசிகர்களை கண்கலங்க வைத்த வீடியோ

By Asianet Tamil cinema  |  First Published Mar 13, 2022, 3:14 PM IST

SA chandrasekar : சென்னை தியாகராய நகரில் உள்ள பிளாட்ஃபார்மில் படுத்து உறங்குவது போன்று கடந்த வாரம் எஸ்.ஏ.சி வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் வைரல் ஆனது.


1980-களில் முன்னணி இயக்குனர்

தமிழ் சினிமாவில் 1980-களில் முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் எஸ்.ஏ.சந்திரசேகர். இவர் தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு, கன்னடம் போன்ற பல்வேறு மொழிகளிலும் திரைப்படங்களை இயக்கி உள்ளார். குறிப்பாக இவர் இயக்கிய சட்டம் ஒரு இருட்டறை, தேவா, ஒன்ஸ் மோர், நான் சிகப்பு மனிதன், நெஞ்சிருக்கும் வரை போன்ற படங்கள் ரசிகர்களால் இன்றளவும் கொண்டாடப்பட்டு வருகின்றன.

Tap to resize

Latest Videos

undefined

விஜய்யின் தந்தை

தமிழ் சினிமாவில் தற்போது நட்சத்திர இயக்குனர்களாக வலம் வரும் ஷங்கர், எம்.ராஜேஷ், பொன்ராம் ஆகியோரெல்லாம் இவரிடம் உதவி இயக்குனர்களாக பணியாற்றியவர்கள் தான். அதுமட்டுமின்றி தமிழ் திரையுலகில் தற்போது மாஸ் ஹீரோவாக இருக்கும் நடிகர் விஜய்யின் தந்தையும் இவர் தான், அவரை கோலிவுட்டில் நடிகராக அறிமுகப்படுத்திய பெருமையும் எஸ்.ஏ.சி-யையே சேரும்.

விஜய்யுடன் கருத்து வேறுபாடு

நடிகர் விஜய்யும், அவரது தந்தை எஸ்ஏசி-யும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த சில ஆண்டுகளாக பேசிக்கொள்வதில்லை. இந்த நிலையில், இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர், யார் இந்த எஸ்.ஏ.சி என்ற யூடியூப் சேனல் ஒன்றை ஆரம்பித்து அதில் தான் வாழ்க்கையில் கடந்து வந்த பாதை குறித்து உருக்கமாக பேசி வீடியோ வெளியிட்டு வருகிறார்.

யூடியூப் சேனல்

அந்த வகையில், சென்னை தியாகராய நகரில் உள்ள பிளாட்ஃபார்மில் படுத்து உறங்குவது போன்று கடந்த வாரம் இவர் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் வைரல் ஆனது. இந்நிலையில், அவர் தனது அடுத்த வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், சிறுவயதிலேயே இறந்து போன தனது மகள் வித்யா குறித்து உருக்கமாக பேசி உள்ளார்.

மகள் வித்யா குறித்து உருக்கம்

அதில் அவர் பேசியதாவது: “எனக்கு கடவுள் இரண்டு பிள்ளைகளை கொடுத்தார். ஒன்று வித்யா, மற்றொன்று விஜய். இதில் வித்யா, சிறுவயதிலேயே படுசுட்டியா இருப்பா. அம்மாவை ஏய் ஷோபான்னு தான் கூப்பிடுவாள். விஜய்யை கூட டேய் அண்ணானு தான் சொல்வாள். விஜய்க்கு வித்யானா ரொம்ப பிரியம். எங்களை விட கடவுளுக்கு வித்யா மேல் ரொம்ப பாசம் போல, மூன்றரை வயசுலேயே கூப்பிட்டுக்கிட்டார். அந்த நாளை என்னால் மறக்கவே முடியது. ஒரு பிள்ளையை கடவுள் எடுத்துக் கொண்டாலும் இன்னொரு பிள்ளை மூலம் உலகமெல்லாம் எனக்கு நிறைய பிள்ளைகள் கிடைத்திருக்கிறார்கள்” என நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.

இதையும் படியுங்கள்... Radhe shyam Box Office : 2 நாளில் ரூ.100 கோடி...! வசூலில் வலிமையை அடிச்சுதூக்கி முதலிடம் பிடித்தது ராதே ஷ்யாம்

 

click me!