
கள்ளன் திரைப்பட விழாவில் பேசிய பிக்பாஸ் ஆரி, ப்ளூ சட்டை மாறனுக்கு வார்னிங் கொடுத்து, பரோட்டா மாவு பிசைஞ்ச மாதிரி மூஞ்சி என்று சொல்வதெல்லாம் மிக பெரிய வன்மம் என்று பேசியுள்ளார்.
எச்.வினோத் இயக்கத்தில், அஜித் குமார் நடிப்பில், கடந்த 24ம் தேதி உலகம் முழுவதும் மாஸாக வெளியான திரைப்படம் வலிமை. போனிகபூர் தயாரிப்பில், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 4 மொழிகளில் வெளியாகி உள்ள இந்த திரைப்படத்திற்கு, ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனம் கிடைத்தது. இதில் கதை, பாடல்கள் என அனைத்தையும் தாண்டி அஜித்தின் மெர்சலான பைக் ரேஸ் காட்சிகள் ரசிகர்கள் பலரால் பெரிதும் கொண்டாடப்பட்டது.
வலிமை திரைப்படம்:
ரசிகரின் ஏகோபித்த வரவேற்பை பெற்ற, வலிமை திரைப்படம் வெளியான முதல் மூன்று நாட்களில் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி வசூல் செய்து சாதனை பெற்றது. முதல் வார முடிவில், உலகமுழுவதும் தற்போது வரை ரூ.200 கோடிக்கும் மேல் வசூல் செய்திருக்கும் என கூறப்படுகிறது.திரைப்படம் பார்க்கும் பலரில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
ப்ளூ சட்டை' மாறன் விமர்சனம்:
குறிப்பாக, ஒவ்வொரு திரைப்படம் வெளிவரும் போதும், யூடியூப் திரைப்படங்களை விமர்சனம் செய்து வரும் 'ப்ளூ சட்டை' மாறனின் விமர்சனத்தை எதிர்பார்த்து இருக்கும் ரசிகர் பட்டாளம் ஏராளம். அதேசமயம், படம் எடுக்கும் இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் குறித்து தனது பாணியில் அதிரடியாக 'ப்ளூ சட்டை' மாறன் சொல்லும் விமர்சனம் சினிமா துறையினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தும்.
அந்த வகையில், சமீபத்தில் வலிமை படத்தை விமர்சித்து இருந்தார். வலிமை படத்தை மட்டுமின்றி அஜித் குறித்தும் அவர் மோசமாக விமரித்து இருந்தார். இது அஜித் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தி அனைவரும் தீட்டி தீர்த்தனர். பிரபலங்கள் பலரும் கண்டித்திருந்தனர்.
கள்ளன் திரைப்பட விழா:
இந்நிலையில், டைரக்டர் ராம் மற்றும் அமீரிடம் அசிஸ்டென்டாக பணியாற்றிய, புது முக இயக்குனரின் கள்ளன் திரைப்பட விழாவில் சிறப்பு விருந்தினராக ஆரி கலந்து கொண்டு பேசினார். அப்போது, பேச்சின் இடையில் ப்ளூ சட்டை மாறனின் பெயரை சொல்லி திட்டியுள்ளார்.
ப்ளூ சட்டை மாறனுக்கு வார்னிங் கொடுத்த ஆரி:
அதில் அவர், ப்ளூ சட்டை மாறன் தரம் தாழ்ந்த விமர்சனங்கள் பேசுவதை நிறுத்த வேண்டும். முதலில், ப்ளூ சட்டை மாறன் எங்கு இருந்து வந்தார். எப்படி வந்தார் என்பதை நினைத்து பார்க்க வேண்டிய தருணம்.
தமிழ் சினிமாவில் தற்போது உச்ச நட்சத்திரமாக இருக்கும் அஜித் தன்னுடைய சொந்த உழைப்பால் உயர்ந்தவர். பரோட்டா மாவு பிசைஞ்ச மாதிரி மூஞ்சி என்று சொல்வதெல்லாம் மிக பெரிய வன்மம் என்று பேசியுள்ளார். இந்த செய்தி அஜித் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.