’தமிழரசன்’ படம் மூலம் நிறைவேறிய விஜய் ஆண்டனியின் பேராசை...

Published : Jan 19, 2019, 09:37 AM IST
’தமிழரசன்’ படம் மூலம் நிறைவேறிய விஜய் ஆண்டனியின் பேராசை...

சுருக்கம்

நேற்று பிரசாத் ஸ்டுடியோவில், முதல் ஷாட்டை துவக்கிவைத்து, விஜய் ஆண்டனிக்கு வாழ்த்து தெரிவித்த இளையராஜா, ’’இந்த படம் பிள்ளையார் சுழி போட்டதிலிருந்தே எல்லாமே பாசிடிவாகவே நடந்து கொண்டிருக்கிறது.  இந்த படம் நிச்சயமாக வெற்றி பெறும்’’ என்று வாழ்த்தினார்.

ஹீரோவாக தொடர்ந்து ஹிட் அடிக்கத் துவங்கியபிறகு, ஒரே ஒரு படத்திலாவது இசைஞானி இளையராஜா இசையில் நடித்துவிட வேண்டும் என்ற பேராவலை தனது பேட்டிகளில் வெளிப்படுத்துக்கொண்டே இருந்தவர் இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி. தற்போது அவரது ஆசை பாபு யோகேஸ்வரன் இயக்கும் ‘தமிழரசன்’ படம் மூலம் நிறைவேறியுள்ளது.

நேற்று பிரசாத் ஸ்டுடியோவில், முதல் ஷாட்டை துவக்கிவைத்து, விஜய் ஆண்டனிக்கு வாழ்த்து தெரிவித்த இளையராஜா, ’’இந்த படம் பிள்ளையார் சுழி போட்டதிலிருந்தே எல்லாமே பாசிடிவாகவே நடந்து கொண்டிருக்கிறது.  இந்த படம் நிச்சயமாக வெற்றி பெறும்’’ என்று வாழ்த்தினார்.

படத்தின் இன்னொரு ஹைலைட் ஜெயம் ரவியின் அண்ணன் மோகன்ராஜாவின் வாரிசு பிரணவ் இப்படத்தில் ஒரு முக்கிய பாத்திரத்தில் அறிமுகமாகவிருப்பது. தாத்தா எடிட்டர் மோகனின் ஆசியோடு பிரணவ் அறிமுகமாகிறார்.

ஒரு துறையில் பிரபலமாக இருக்கும் ஒருவர் உயர்ந்து வந்தவுடன் தான் பட்ட கஷ்டங்களை நினைத்து தன் வாரிசுகளை அந்த துறையில் ஈடுபடுத்த மாட்டார்கள். ஆனால் எடிட்டர் மோகன் அவர்கள் தான் பெற்ற வெற்றியை தன் வாரிசுகளான மோகன் ராஜாவை இயக்குனராகவும்,  ரவியை ஜெயம்ரவியாகவும் வெற்றி பெற செய்திருக்கிறார்.அவர்களும் தங்கள் வாரிசுகளை திரைத்துறையில் நம்பி களம் இறக்கி இருக்கிறார்கள்.

ஜெயம் ரவியின் மகன் ஆரவ் ஏற்கெனவே ’டிக் டிக் டிக்’ படத்தில் நடிகராக களம் இறங்கி  வெற்றி பெற்றிருக்கிறார். இப்போது ’தமிழரசன்’ மூலம் பிரணவ் மோகன் களம் காணுகிறார்.

இச்செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள மோகன் ராஜா...Another happy day for the family 😇 With the blessings of Appa, my son Pranav Mohan made his acting debut today in #Thamizharasan .. He needs all your blessings🙏 Big Thanks to @vijayantony for gifting us this surprise 👍 என்று பதிவிட்டிருக்கிறார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

'ரவுடி ஜனார்தனா' கிளிம்ப்ஸ்: குறி தப்பாது! மிரட்டலான கேங்ஸ்டர் அவதாரத்தில் விஜய் தேவரகொண்டா!
செந்தில் பேச்சை கேட்காத பாண்டியன்: இருந்தாலும் இம்புட்டு வைராக்கியம் ஆகாது: குடும்பத்தில் வெடிக்கும் அடுத்த சண்டை!