’இதோ கிளம்பிட்டேங்ண்ணா’...பொங்கலுக்கு அரசியல் பிரவேசத்தை அறிவிக்கிறார் விஜய்

Published : Nov 16, 2018, 10:01 AM ISTUpdated : Nov 16, 2018, 10:02 AM IST
’இதோ கிளம்பிட்டேங்ண்ணா’...பொங்கலுக்கு அரசியல் பிரவேசத்தை அறிவிக்கிறார் விஜய்

சுருக்கம்

ரஜினி, அஜீத், சிம்பு ரசிகர்களைவிட, வரும் தமிழ்ப்புத்தாண்டு விஜய் ரசிகர்களுக்குத்தான் பெரும் கொண்டாட்டமாக இருக்கப்போகிறது போலிருக்கிறது. ‘சர்கார்’ விவகாரத்தில் அநியாயத்துக்கு அமைதி காத்த விஜய், அப்படம் ரிலீஸான மறுவாரமே தனது அடுத்த படத்தையும் அறிவித்த உடன் விஜய் ரசிகர்களுக்கு பயங்கர ஷாக். இப்படி அமைதியாகவே போனால் அரசியல்வாதிகள் ஏறி மிதிப்பார்களே என்று.

ஆனால் அட்லீ படச்செய்தி வெளியான மறுநாளே அப்படம் அடுத்த தீபாவளிக்குத்தான் வெளிவரும் என்று ஒரு உள்குத்து வைத்தாரே விஜய்?. அங்கேதான் இருக்கிறது சூட்சுமம். எவ்வளவுதான் பிரம்மாண்டமான படமாக இருந்தாலும் விஜயின் கால்ஷீட் 100 நாட்களுக்கு மேல் தேவைப்படாத நிலையில்,  ஒரு வருடத்தின் மீதி 265 நாட்களில் என்னதான் செய்யப்போகிறார் விஜய். நடுவில் இன்னொரு படமா? கண்டிப்பாக இல்லை.

‘சர்கார்’ல் பட்ட அவமானத்தை ஒட்டி, அடுத்து தனக்கு தரப்பட்ட குடைச்சல்களையும் மனதில் கொண்டு, இனியும் அரசியல் எண்ட்ரியை தள்ளிப்போடுவதில்லை என்று மிக உறுதியான முடிவை எடுத்திருக்கிறார் விஜய். அட்லீ படப்பிடிப்பு தேதிகளை மூன்று நான்கு ஷெட்யூல்களாகப் பிரித்துக்கொண்டு, இடைப்பட்ட நாட்களில் முதலில் ரசிகர் மன்றத்தினரை சந்திப்பது, அடுத்து மாவட்ட வாரியாக பொதுமக்களைச் சந்திப்பது, சில சமூக பிரச்சினைகளுக்கு உரத்த குரல் கொடுப்பது என்று திட்டம் தீட்ட ஆரம்பித்துவிட்டாராம் விஜய்.

’சினிமாவுல இருந்துட்டு வெட்டிச்சவடால் விடக்கூடாது. தைரியம் இருந்தா நேரடியா அரசியல்ல இறங்கு’ என்று தன்னை உசுப்பேத்திய அ.தி.மு.க. அமைச்சர்களுக்கு வரும் பொங்கல் அன்று இந்த இனிப்பான செய்தியை வழங்கத் தயாராகிவிட்டார் விஜய் என்கின்றன அவரது நெருங்கிய வட்டாரங்கள்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

எது பண்ணாலும் பிளான் பண்ணி பண்ணுவோம் என்று கூறும் இயக்குனர்; சூர்யாவின் 47வது பட விழா பூஜை!
தன்னுடைய திரையுலக கதாநாயகன் அஜித் குமாரை சந்தித்த நடிகர் சிம்பு!